கோத்தா மலாக்கா (P138) மலேசிய மக்களவைத் தொகுதி மலாக்கா | |
---|---|
Kota Melaka (P138) Federal Constituency in Malacca | |
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி (P138 Kota Melaka) | |
மாவட்டம் | மத்திய மலாக்கா மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 164,140 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா மலாக்கா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா லக்சுமணா, கெசிடாங், டூயோங், பண்டார் ஈலிர், தெலுக் மாஸ் |
பரப்பளவு | 66 ச.கி.மீ[3] |
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | கூ போவே தியோங் (Khoo Poay Tiong) |
மக்கள் தொகை | 215,409[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Melaka; ஆங்கிலம்: Kota Melaka Federal Constituency; சீனம்: 马六甲市区国会议席) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தின் மத்திய மலாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P138) ஆகும்.[5]
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
மத்திய மலாக்கா மாவட்டம் என்பது மலாக்கா மாநிலத்தில் மத்திய மலாக்கா மாவட்டம்; ஜாசின் மாவட்டம்; அலோர் காஜா மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய மாவட்டம் ஆகும். இருப்பினும் கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர்தான் மத்திய மலாக்கா மாவட்டம் உருவாக்கம் பெற்றது.
மத்திய மலாக்கா மாவட்டத்தில் ஆங் துவா ஜெயா நகரம் என்பது புதிதாக உருவாக்கப்பட்ட நகரம். பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மேம்பாடுகளுடன், மலாக்கா மாநிலத்தின் நிர்வாக மையமாகவும்; அறிவார்ந்த மாநகரமாகவும், மலாக்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நகராட்சியாகும்.[7]
மலாக்கா மாநிலத்தைப் பொருத்த வரையில் ஆங் துவா ஜெயா புறநகப்பகுதி மிகவும் முக்கியமானது. ஏனெனில் மலாக்கா மாநில அரசின் நிர்வாக மையம் இந்த ஆங் துவா ஜெயா நகராட்சி நிர்வாகத்திற்குள் தான் அமைந்துள்ளது.
கோத்தா மலாக்கா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கோத்தா மலாக்கா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P098 | 1974–1978 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) |
ஜனநாயக செயல் கட்சி |
5-ஆவது மக்களவை | 1978–1982 | சான் தெக் சான் (Chan Teck Chan) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) | ||
7-ஆவது மக்களவை | P113 | 1986–1990 | லிம் குவான் எங் (Lim Guan Eng) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | காகாசான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | ||
9-ஆவது மக்களவை | P123 | 1995–1999 | ||
1999 | காலி | |||
10-ஆவது மக்களவை | 1999–2004 | கெர்க் கிம் கோக் (Kerk Kim Hock) |
மாற்று முன்னணி (ஜனநாயக செயல் கட்சி) | |
11-ஆவது மக்களவை | P138 | 2004–2008 | ஓங் நய் சி (Wong Nai Chee) |
பாரிசான் நேசனல் (மலேசிய சீனர் சங்கம்) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | சிம் தோங் கிம் (Sim Tong Him) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2017 | |||
2017–2018 | சுயேச்சை | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | கூ போவே தியோங் (Khoo Poay Tiong) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
கூ போவே தியோங் (Khoo Poay Tiong) | பாக்காத்தான் அரப்பான் | 73,995 | 60.07 | 12.62 ▼ | |
சுகாய்மி போர்கான் (Suhaime Borhan) | பெரிக்காத்தான் நேசனல் | 27,575 | 22.39 | 22.39 | |
கோன் கி யாவோ (Kon Qi Yao) | பாரிசான் நேசனல் | 20,686 | 16.79 | 8.18 ▼ | |
நோராசுலான் சா கசாலி (Norazlanshah Hazali) | சுயேச்சை | 925 | 0.75 | 0.75 | |
மொத்தம் | 1,23,181 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,23,181 | 98.69 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,635 | 1.31 | |||
மொத்த வாக்குகள் | 1,24,816 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 1,64,140 | 76.04 | 8.38 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)