கோரமண்டல விரைவுத் தொடர்வண்டி அல்லது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இந்திய இரயில்வேயினால் நடத்தப்படும் ஒரு அதிவிரைவு இரயில் சேவையாகும். ஹவுரா இரயில் நிலையத்திலிருந்து (ஹவுரா, கொல்கத்தா), சென்னை சென்ட்ரல் (சென்னை, தமிழ்நாடு) வரை தினமும் இந்த இரயில் செயல்படுகிறது. இந்திய இரயில்வேயின் இரயில் சேவைகளில் இது ஒரு முக்கியமான இரயில் ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான வங்காள விரிகுடாவின் கரையோரமாக செல்லக்கூடிய இரயில் என்பதால் அந்தப்பகுதியின் பெயரான கோரமண்டல கடற்கரை என்பதையே, இந்த இரயிலுக்கு பெயராக வைத்துள்ளனர். இந்த இரயில் சேவை தென்கிழக்கு இரயில்வே மண்டலத்திற்குரியது.
சோழர்களின் இடங்களை அனைத்தையும் சேர்த்து தமிழில் ‘சோழ மண்டலம்’ என்று அழைப்பர், இதனை ‘சோழ சாம்ராஜ்யம்’ எனவும் கூறுவர். இதிலிருந்துதான் ‘கோரமண்டலம்’ எனும் வார்த்தை பிறந்தது. இந்தியாவின் தென்கிழக்கு கரையோரத்தில் உள்ள பகுதிகளுக்கு ‘கோரமண்டலக் கரையோரம்’ என்று பெயர்.
எண் | நிலையத்தின் பெயர் (குறியீடு) | வரும் நேரம் | புறப்படும் நேரம் | நிற்கும் நேரம் (நிமிடங்கள்) |
கடந்த தொலைவு (கி.மீ) |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | சென்னை சென்ட்ரல் (MAS) | தொடக்கம் | 08:45 | 0 | 0 | 1 | 1 |
2 | ஓங்கோல் (OGL) | 12:54 | 12:55 | 1 | 292 | 1 | 1 |
3 | விஜயவாடா சந்திப்பு (BZA) | 15:10 | 15:25 | 15 | 431 | 1 | 1 |
4 | தாடேபள்ளிக்கூடம் (TDD) | 16:39 | 16:40 | 1 | 538 | 1 | 1 |
5 | ராஜமுந்திரி (RJY) | 17:32 | 17:42 | 10 | 580 | 1 | 1 |
6 | விசாகப்பட்டினம் (VSKP) | 21:50 | 22:10 | 20 | 781 | 1 | 1 |
7 | பிரம்மபூர் (BAM) | 01:55 | 01:57 | 2 | 1058 | 2 | 1 |
8 | குர்டா சாலை சந்திப்பு (KUR) | 04:05 | 04:15 | 10 | 1204 | 2 | 1 |
9 | புவனேஸ்வர் (BBS) | 04:35 | 04:40 | 5 | 1223 | 2 | 1 |
10 | கட்டக் (CTC) | 05:10 | 05:15 | 5 | 1251 | 2 | 1 |
11 | ஜெய்ப்பூர் ஹே ரோடு (JJKR) | 06:12 | 06:13 | 1 | 1323 | 2 | 1 |
12 | பத்ரக் (BHC) | 07:15 | 07:17 | 2 | 1367 | 2 | 1 |
13 | பல்சோர் (BLS) | 08:00 | 08:05 | 5 | 1429 | 2 | 1 |
14 | கரக்பூர் சந்திப்பு (KGP) | 09:38 | 09:48 | 10 | 1547 | 2 | 1 |
15 | சாந்திராகாச்சி சந்திப்பு (SRC) | 11:14 | 11:15 | 1 | 1655 | 2 | 1 |
16 | ஹவுரா சந்திப்பு (HWH) | 11:50 | முடிவு | 0 | 1662 | 2 | 1 |
இதன் வண்டி எண்கள் 12841 மற்றும் 12842. 12841 ஹவுராவிலிருந்து 14.50 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலை அடுத்தநாள் 17.15 மணியில் அடைகிறது. 12842 சென்னை சென்ட்ரலில் இருந்து 8.45 மணிக்கு புறப்பட்டு ஹவுராவினை அதற்கடுத்தநாள் 12.00 மணியில் அடைகிறது.[1]
இதன் மொத்த பயண தூரமான 1662 கிலோ மீட்டர்களை, 27 மணி 5 நிமிடங்களில், சுமார் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்துடன் கடக்கிறது. இந்திய இரயில்வேயின் மிகவிரைவாக செல்லக்கூடிய இரயில்களில் இது மிகவும் முக்கியமான இரயில் ஆகும். இது தென்கிழக்கு இரயில்வேயின் ராஜா எனவும் அழைக்கப்படுகிறது. ராஜாதானி எக்ஸ்பிரஸ், டுரன்டோ எக்ஸ்பிரஸ், ஷதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பல விரைவு இரயில்கள் இதுபோன்ற வழித்தடங்களில் செயல்படுகின்றபோதும் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருத்தப்படுகிறது.[2]
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் பல முக்கிய நதிகளின் மேலாக செல்கிறது. அவற்றின் பட்டியல் பின்வருமாறு:
மார்ச் 15, 2002 இல் நெல்லூரினைக் கடந்து செல்லும்போது பதுகுபடு சாலைக்கு மேலுள்ள பாலத்தில் பிற்பகல் 2.40 மணியளவில் கோரமண்டல எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதில் ஏறக்குறைய 100 பேர் காயமடைந்தனர். நெல்லூர் மற்றும் விஜயவாடாவிற்கு இடையேயுள்ள மோசமான இரயில் பாதையே இதற்குக் காரணம் என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
பிப்ரவரி 13, 2009 இல் புவனேஸ்வரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்பூரின் சாலைப் பகுதியில் செல்லும்போது கோரமண்டல எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. இதில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.[3]
டிசம்பர் 30, 2012 இல் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த விபத்தில் இரண்டு கன்றுகளையும் சேர்த்து 6 யானைகள் உயிரிழந்தன.
ஜனவரி 14, 2012 இல் லிங்கராஜ் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்லும்போது இரயிலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்திலேயே வெளிவந்த புகையினைக் கொண்டு தீப்பிடித்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்த இரயில்நிலையமான புவனேஸ்வரில் நிறுத்தப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டு, எரிந்த பெட்டிகள் அதே நிலையத்தில் கழட்டிவிடப்பட்டன. மீதமுள்ள பெட்டிகளுடன் தொடருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
சூன் 2, 2023 இல் ஒடிசா தொடருந்து விபத்து.[4]