கோரா திவ் | |
---|---|
Country | இந்தியா |
State | இலட்சத்தீவுகள் |
Subgroup | அமினிதிவி |
பரப்பளவு | |
• மொத்தம் | 339.45 km2 (131.06 sq mi) |
Languages | |
• Official | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
கோரா திவ் (Cora Divh) அல்லது கோரா தீவே (Coradeeve) (லிட்டில் பேசஸ் டி பெட்ரோ பாங் எனவும் அழைக்கப்படும்) என்பது நீரில் மூழ்கிய கரைத்தட்டு அல்லது நீரில் மூழ்கிய பவளத் தீவு ஆகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[1] இக்கரைத்தட்டின் பெயரில் இருந்தே இந்திய ரோந்துக் கப்பல் ஒன்றிற்குப் பெயரிடப்பட்டது.[2]
பஸ்ஸாஸ் டி பெட்ரோ, செசோட்டிரிஸ் கரைத்தட்டு ஆகியவற்றை அடுத்து இலட்சத்தீவுகளின் மூன்றாவது மிகப்பெரிய பவளத்தீவு இதுவேயாகும். இதன் கடற்காயல் பரப்பளவு 339.45 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இதற்கு வடக்காக 90 கிலோமீற்றர்களுக்கும் அப்பால் அடஸ் கரைத்தட்டு அமைந்துள்ளது.