கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி

கோலா நெருஸ் (P035)
மலேசிய மக்களவைத் தொகுதி
 திராங்கானு
Kuala Nerus (P035)
Federal Constituency in Terengganu
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி
(P035 Kuala Nerus)
மாவட்டம் கோலா நெருஸ் மாவட்டம்
 திராங்கானு
வாக்காளர்களின் எண்ணிக்கை107,081 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிகோலா நெருஸ் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா நெருஸ் மாவட்டம், பத்து ராகிட், ரெடாங் தீவு, கோலா திராங்கானு மாநகராட்சி
பரப்பளவு331 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அலியாஸ் ரசாக்
(Alias Razak)
மக்கள் தொகை144,220 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் கோலா நெருஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (98.6%)
  சீனர் (1.1%)
  இதர இனத்தவர் (0.2%)

கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Nerus; ஆங்கிலம்: Kuala Nerus Federal Constituency; சீனம்: 瓜拉尼鲁斯国会议席) என்பது மலேசியா, திராங்கானு, கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P035) ஆகும்.[8]

கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

கோலா நெருஸ் மாவட்டம்

[தொகு]

கோலா நெருஸ் மாவட்டம், திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இந்த மாவட்டம் மிகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். 2014-ஆம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

முன்பு கோலா திராங்கானு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கோலா நெருசு மாவட்டத்தின் தலைநகரம் கோலா நெருஸ் நகரம். கோங் படாக், செபெராங் தாகிர், பத்து ராகிட் மற்றும் பத்து என்னாம் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள் ஆகும்.

ரெடாங் தீவுக்கூட்டம

[தொகு]

கோலா நெருஸ் மாவட்டத்தில் ரெடாங் தீவுக்கூட்டம (Redang archipelago) உள்ளது. ரெடாங் தீவு மற்றும் பினாங்கு தீவு (Pinang Island) ஆகியவை இரண்டும் முக்கிய தீவுகள். மக்கள் வசிக்கும் தீவுகள். ரெடாங் தீவுக்கூட்டம் தென் சீனக் கடலில் உள்ள கோலா திராங்கானுவில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

1994-ஆம் ஆண்டு ரெடாங் தீவுக்கூட்டம் ஒரு கடல் பூங்காவாக நியமிக்கப்பட்டது. மலேசியாவில், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் நீருக்கடியிலான இயற்கைத் தன்மையை அனுபவிக்க மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்காக அந்தக் கடல் பூங்கா நிறுவப்பட்டது.[10]

கோலா நெருஸ் மக்களவைத் தொகுதி

[தொகு]
கோலா நெருஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கோலா நெருஸ் தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P031 1974–1978 நிக் அசன் அப்துல் ரகுமான்
(Nik Hassan Abdul Rahman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 இப்ராகிம் அசுமி அசன்
(Ibrahim Azmi Hassan)
7-ஆவது மக்களவை P032 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 அப்துல் ரசீட் முகமது
(Abdul Rashid Muhammad)
9-ஆவது மக்களவை P035 1995–1999 அப்துல் ரகீன் முகமது சைது
(Abdul Rahin Mohd Said)
10-ஆவது மக்களவை 1999–2004 சுக்ரிமான் சம்சுதீன்
(Shukrimum Shamsudin)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 செ அசுமி அப்துல் ரகுமான்
(Che Azmi Abdul Rahman)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 முகமது நசீர் இப்ராகிம் பிக்ரி
(Mohd Nasir Ibrahim Fikri)
13-ஆவது மக்களவை 2013–2018 கைருதீன் ரசாலி
(Khairuddin Razali)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2020 மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
2022 சுயேச்சை
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் அலியாஸ் ரசாக்
(Alias Razak)
பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)

கோலா நெருஸ் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ∆%
மலேசிய இசுலாமிய கட்சி அலியாஸ் ரசாக்
(Alias Razak)
56,697 64.70% + 10.04% Increase
பாரிசான் நேசனல் முகமது கைருதீன் அமன் ரசாலி
(Mohd Khairuddin Aman Razali)
26,932 30.73% - 10.22%
பாக்காத்தான் அரப்பான் சுகைமி அசிம்
(Suhaimi Hashim)
3,708 4.23% - 2.16%
தாயக இயக்கம் அசகார் வாகீத்
(Azahar Wahid)
291 0.33% + 0.33% Increase
செல்லுபடி வாக்குகள் (Valid) 87,628 100%
செல்லாத வாக்குகள் (Rejected) 736
ஒப்படைக்காத வாக்குகள் (Unreturned) 229
வாக்களித்தவர்கள் (Turnout) 88,593 82.71% - 4.80%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) 105,952
பெரும்பான்மை (Majority) 29,765 33.97% + 22.26% Increase
மலேசிய இசுலாமிய கட்சி வெற்றி பெற்ற கட்சி (Hold)
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. Joshua B. Fisher; Rizwan Nawaz; Rosmadi Fauzi; Faiza Nawaz; Eran Sadek Said Md Sadek; Zulkiflee Abdul Latif; Matthew Blackett (30 May 2008). "Balancing water, religion and tourism on Redang Island, Malaysia". Environmental Research Letters 3 (2): 024005. doi:10.1088/1748-9326/3/2/024005. Bibcode: 2008ERL.....3b4005F. http://josh.yosh.org/publications/Fisher%20et%20al%202008%20-%20Balancing%20water,%20religion%20and%20tourism%20on%20Redang%20Island,%20Malaysia.pdf. பார்த்த நாள்: 9 April 2015. 
  11. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]