கோழி உருண்டை (Chicken balls) என்பது சிறிய, கோள அல்லது கிட்டத்தட்டக் கோள வடிவ கோழி துண்டுகள் கொண்ட உணவு. இவை பல்வேறு உணவு வகைகளில் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுகின்றன.
பாக்கித்தானில் உள்ள சீன உணவகத்தில் சிக்கன் உருண்டைகள்
கோழி உருண்டைகள் (எளிய சீனம்: 鸡球; பின்யின்: jī qiú) என்பது கனடா, அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம்[1] ஆகியவற்றில் உண்ணப்படும் நவீன சீன உணவு வகையாகும். இந்த உணவு மிருதுவான குழைவு மாவு பூச்சுடன் வறுத்த கோழியின் சிறிய துண்டுகளைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் கறி சாஸ், இனிப்பு மற்றும் புளிப்பு சாஸ் அல்லது பிளம் சாஸ் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகின்றன.
தென் சீன மீன் பந்துகளைப் போன்ற மற்றொரு வகையான கோழிப் உருண்டைகள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பீன்சு மற்றும் சப்பான் (சுகுனே) போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன.[2]