கோ. சு. மேலகோட் G. S. Melkote | |
---|---|
கோபாலையா சுப்புகிருஷ்ணா மேல்கோட் | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1971 - 1977 | |
முன்னையவர் | விநாயக் ராவ் கோரத்கர் |
தொகுதி | ஐதராபாத்து |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1962 - 1970 | |
முன்னையவர் | விநாயக் ராவ் கோரத்கர் |
தொகுதி | ஐதராபாத்து |
பதவியில் 1957 - 1962 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்ட இருக்கை |
பின்னவர் | ஜகனாத்ராவ் வெங்கட்ராவ் சந்திரிகி |
தொகுதி | ராய்ச்சூர் |
உறுப்பினர் ஐதராபாத் மாநிலம் (1948–1956) | |
பதவியில் 1952–1957 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்ட இருக்கை |
பின்னவர் | கே. சீதையா குப்தா |
தொகுதி | முசீராபாத்து |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 அக்டோபர் 1901 பெர்காம்பூர், ஒடிசா, இந்தியா |
இறப்பு | 9 மார்ச் 1982 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1970, 1975-1982) |
பிற அரசியல் தொடர்புகள் | தெலங்கானா பிராஜ் சமிதி (1970-1975) |
துணைவர் | விமலாபாய் |
பிள்ளைகள் | 5; 3 மகன்கள் & 2 மகள்கள் |
பெற்றோர் |
|
இணையத்தளம் | [1] or at here in Geni.com or Click here GSM_bio.html |
கோ. சு. மேல்கோட் (16 அக்டோபர் 1901 – 10 மார்ச் 1982) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவரது முழுப்பெயர் கோபாலையா சுப்புகிருஷ்ணா மேல்கோட் என்பதாகும்.
மேல்கோட் ஒடிசா மாநிலத்தில் உள்ள பெர்காம்பூரில் வசந்த பஞ்சமி புனித நாளில் பிறந்தார். இவர் 1927-ல் ஐதராபாத்தில் உள்ளஉசுமானியா பல்கலைக்கழகத்தில் எல். எம். எஸ். பட்டம் பெற்றார். மேல்கோட் சில காலம் பாரம்பரிய மருத்துவத்தை யோகப் பயிற்சிகளுடன் இணைத்து பயிற்சி செய்தார். இவர் இந்திய மருத்துவ சங்கத்தின் ஐதராபாத்து கிளையின் தலைவராக சில காலம் இருந்தார். மேல்கோட் பதஞ்சலி யோகா ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.
இவர் ஹோம் ரூல் இயக்கம், உப்பு சத்தியாகிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கங்கள் போன்ற இந்திய விடுதலை இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, 1952 மற்றும் 1957க்கு இடையில் முசிராபாத்திலிருந்து ஐதராபாத்து சட்டமன்ற உறுப்பினராக ஐதராபாத்து மாநிலத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார். 1952 முதல் ஐதராபாத்து மற்றும் ஆந்திர மாநிலம் (மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956ன் கீழ் ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க) ஒன்றிணைக்கும் வரை ஐதராபாத்து மாநிலத்தின் நிதி அமைச்சராகவும் இருந்தார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை (1962, 1967 மற்றும் 1977) ஐதராபாத்து தொகுதியிலிருந்தும், 1957-ல் ராய்ச்சூர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் 1970-ல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகி தெலங்கானா இயக்கத்தில் சேர்ந்தார். இறுதியில் தெலங்கானா பிரஜா சமிதியில் சேர்ந்தார்.[1]
இவரது மனைவி விமலாபாய் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.[2]