கோ. விஜயராகவன் | |
---|---|
பிறப்பு | 18 செப்டம்பர் 1942 பெரும்புழா, கொல்லம், கேரளா, இந்தியா |
தேசியம் | ![]() |
கல்வி | இருதயநோய் நிபுணர், ஆசிரியர், எழுத்தாளர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி தில்லி பல்கலைக்கழகம் |
செயற்பாட்டுக் காலம் | 1982–தற்போது வரை |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | கேரள மருத்துவ அறிவியல் நிறுவனம் (துணைத் தலைவர்) அஸ்வினி சிறப்பு மருத்துவமனை (தலைவர்) |
விருதுகள் | பத்மசிறீ |
வலைத்தளம் | |
gvr |
கோவிந்தன் விஜயராகவன் (Govindan Vijayaraghavan) இந்திய இருதயநோய் நிபுணர் ஆவார். இந்தியாவில் முதல் 2 டி எக்கோ கார்டியோகிராபி ஆய்வகத்தை நிறுவிய பெருமைக்குரியவர். கேரளாவின் திருவனந்தபுரத்தின் கேரள மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவரும், நிறுவன இயக்குநருமான இவர் தொடர்ச்சியான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். 2009ஆம் ஆண்டில் இந்திய அரசு மருத்துவ அறிவியல் துறையில் செய்த சேவைகளுக்காக இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[1]
விஜயராகவன், 1942 செப்டம்பர் 18ஆம் தேதி கேரளாவின் கொல்லம், பெரும்புழாவில் சாகித்ய சிரோமனி எம். கே. கோவிந்தன் என்ற சமசுகிருத அறிஞரின் மகனாகப் பிறந்தார். திருவனந்தபுரம் மாதிரி பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்து, 1964இல் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். 1969இல் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டமும் பெற்றார். வேலூரிலுள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார். 1973ஆம் ஆண்டில் இருதயவியல் முனைவர் பட்டம் (டி. எம்) பெற்று, இணைப்பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] இவர் 1976ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்குத் திரும்பிச் சென்று, முதுகலை மருத்துவப் பள்ளி மற்றும் இலண்டனின் பிராம்ப்டன் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து, கேரளாவில் பொதுவாகக் காணப்படும் பல்வேறு வகையான இதய நோய்களான எண்டோமியோகார்டியல் பைப்ரோஸிஸ் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.[3][4]
விஜயராகவன் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.[5] தற்போது திருவனந்தபுரத்தில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)