கௌரீசுவரர் கோயில் | |
---|---|
நாடு | இந்தியா |
மாவட்டம் | கருநாடகம் |
மாவட்டம் | சாமராசநகர் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
கௌரீசுவரர் கோயில் (Gaurishvara Temple) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் சாமராசநகர் மாவட்டத்திலுள்ள ஏலாந்தூர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். 16 ஆம் நூற்றாண்டின் விஜயநகர இராச்சியத்தின் நிலப்பிரபுத்துவமான ஹடிநாடு தலைமையின் உள்ளூர் தலைவர் சிங்கதெப்ப தேவபூபாலன் என்பவரால் இந்த கோயில் கட்டப்பட்டது. [1]
கோவில் திட்டம் மிக எளிது. இது ஒரு கர்ப்பக்கிருகம், ஒரு மண்டபம், கிரானைட் தூண்களால் தாங்கி நிற்கும் ஒரு திறந்த மண்டபம் மற்றும் ஒரு பெரிய நுழைவாயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் வழக்கமான கோபுரம் என்பது இல்லை. இந்த வகை நுழைவாயில் சமகால பாணியில் சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. [1] இந்துக் கடவுளான சிவனின் உலகளாவிய அடையாளமான இலிங்கத்தை இதன் கருவறை கொண்டுள்ளது. மண்டபத்தில் விஷ்ணு, முருகன், பார்வதி, துர்க்கை, பைரவர், வீரபத்திரர், பிள்ளையார் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளன. நுழைவாயிலின் சுவர்கள் புராணக் கதைகளையும், காவியங்களின் காட்சிகளையும் சித்தரிக்கும் புடைப்புச் சிற்பங்களால் பெரிதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நுழைவாயிலுக்கு வழங்கப்பட்ட ஒரு அசாதாரண அலங்காரம் கல்லாலான சங்கிலிகளின் தொகுப்புகளாகும்.