கௌளை இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய , "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ- வக்ர ஷாடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1 ), அந்தர காந்தாரம் (க3 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆரோகணத்தில் க, த வர்ஜம். அவரோகணத்தில் த மட்டும் வர்ஜம்.
ஏகசுருதி ரிஷபம், இந்த இராகத்தின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. இதற்கு கௌளை ரிஷபம் என்றே பெயர்.
கன பஞ்சக இராகங்களாகிய நாட்டை , கௌளை , ஆரபி , வராளி , சிறீ ஆகியவற்றில் இது 2 ஆவதாக வருகின்றது.
தானம் அல்லது மத்திமகால ஆலாபனை இசைக்கும் பொழுது இவ்விராகத்தின் சாயை நன்கு வெளிப்படுகின்றது.
பல இசை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பழமையான இராகம் இது ஆகும். (கௌடை என்று முன்பு அழைக்கப்பட்டுள்ளது).
வேதம் நீ புதிய நாதம் நீ ... - கோயில் புறா
இவற்றையும் பார்க்கவும்[ தொகு ]
↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய