சகாயத்ரியா | |
---|---|
டென்னிசன் பார்ப் (ச. டெனிசோனி) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | சகாயத்ரியா இராகவன் மற்றும் பலர், 2013[1]
|
மாதிரி இனம் | |
சகாயத்ரியா டெனிசோனி பி. டே, 1865 |
சகாயத்ரியா (Sahyadria) என்பது இந்தியாவினைப் பூர்வீகமாகக் கொண்ட சைப்ரினிட் மீன்களின் ஒரு பேரினமாகும்.[2] இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இவை முன்பு புண்டியசு பேரினத்தில் சேர்க்கப்பட்டன.[1] மிகப் பெரிய சகாயத்ரியா 15 cm (5.9 அங்) செமீ (5.9 அங்குலம்) மொத்த நீளத்தை அடையும்.[3]
இந்தப் பேரினத்தின் பெயர் மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளூர் பெயரான "சகாயாத்ரி" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.[1]
இந்தப் பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[3]