சசீந்திர ராஜபக்ச | |
---|---|
6th Chief Minister of Uva Province | |
பதவியில் 20 ஆகத்து 2009 – 13 சனவரி 2015 | |
முன்னையவர் | Gamini Vijith Vijithamuni Soysa |
பின்னவர் | ஹரின் பெர்னாண்டோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இலங்கை |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
துணைவர்(கள்) | லெக்சிகா ராஜபக்ச (இயற்பெயர் பெயிர்ஃபிஸ்) |
முன்னாள் கல்லூரி | மகாநாம கல்லூரி, கொழும்பு சென். தோமஸ் கல்லூரி, கல்கிசை |
இணையத்தளம் | Official Website |
சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இலங்கையில் அமைந்துள்ள ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை இவர் பதவி வகித்து வந்தார். அத்துடன் கதிர்காம ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமேயாகவும் இவர் பதவி வகித்து வந்தார். இவர் சமல் ராஜபக்சவினது மூத்த மகனும் மகிந்த ராசபக்சவின் மருமகனும் ஆவார்.[1][2] இவர் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சிடினைச் சேர்ந்த ஹரின் பெர்னாண்டோவினால் தோற்கடிக்கப்பட்டதன் பின், இவரின் மீதும் இவரது குடும்பத்தின் மீதும் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டது.