சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்

சச்சின்: ஏ பில்லியன் ட்ரிம்ஸ் (சச்சின்: நூறு கோடி கனவுகள்) திரைப்படம் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கிய 2017 இந்திய ஆவணப்படம்-வாழ்க்கை சரித்திரப் படம் மற்றும் ரவி பக்ஷண்ட்கா மற்றும் கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் ஆகியோரின் 200 நாட் ஔட் புரொடக்சனின் கீழ் தயாரிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இந்த திரைப்படம் 26 மே 2017 இல் வெளியிடப்பட்டது. இது டெண்டுல்கரின் கிரிக்கெட்டையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கணிசமாக விவரிக்கிறது, அத்துடன் அவரது வாழ்க்கையின் சில அம்சங்களை வெளிப்படையாகவும், முன்பே கேட்டிடாத மற்றும் பார்த்திராத விஷயங்களை வெளிப்படுத்தியது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நடந்தது. இந்த படத்தின் டப்பிங் பதிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டன. சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த படத்திற்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டது.[1] இப்படத்தில் சச்சின் டெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன்

[தொகு]
முக்கிய கட்டுரையைக் காண:சச்சின் டெண்டுல்கர்
[தொகு]

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர்.துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த  மற்றும் மிகவும் மதிக்கப்படும்  வீரராக பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார். தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.[2] தேர்வுப் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே;[3] வரையறுக்கப்பட்ட பந்துப் பரிமாற்ற அனைத்துலகப் போட்டிகளில் (LOI) முதலாவது இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும்.[4]

அனைத்துலகப் போட்டிகளில் மொத்தமாக நூறு நூறுகளை எட்டிய முதலாமவரும் இவரே.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவினைப் பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். 1994ல் அர்ஜூனா விருது, 1997-98ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 1997 ஆண்டில் விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது, 1999-பத்மஸ்ரீ விருது, 2008-பத்மவிபூஷன் விருது என பல விருதுகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.

வெளியீட்டு

[தொகு]

இந்த படம் 26 மே 2017 இல் இந்தியாவில் வெளியானது.இந்திய விமானப் படை ஆடிட்டோரியத்தில் இந்திய ஆயுத படையில் பணியாற்றிய வீரர்களுக்கு 21 மே அன்று சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறப்புத் திரையிடல் நடத்தினார்.[5] இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் நாடு முழுவதும் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு மொழி ரசிகர்களை கவர்ந்திழுக்க விரும்பினர், என்பதால் இப்படம் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது.அம்மொழிகள் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகும். சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் அறிவித்த ஒரு போட்டியின் மூலம் இப்படத்தின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மே மாதம் சச்சின் டெண்டுல்கர் லண்டனுக்கு சென்று படத்தினை விளம்பரப்படுத்தினார்.

விமர்சனம் மற்றும் வரவேற்பு

[தொகு]
  • இந்துஸ்தான் டைம்ஸ் அத்ன் விமர்சனத்தில் எழுதியது: சச்சின்: ஒரு பில்லியன் கனவுகள் என்ற படம் அதன் பார்வையாளர்களை ஏக்கம் அடையசெய்யும் எல்லாவற்றையும் கொண்டிருந்த்து.
  • டைம்ஸ் ஆஃப் இந்தியா இப்படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களுக்கு 3 நட்சத்திரங்களை வழங்கியது.

இசை

[தொகு]

திரைப்படத்தின் இசை ஏ.ஆர். ரஹ்மானால் இசையமைக்கப்பட்டது. இப்படத்தின் பாடல்கள்களை எழுதியது இர்ஷத் காமில். ஏப்ரல் 24, 2017 ஆம் ஆண்டுகளில் டைம்ஸ் மியூசிக் மூலம் 3 பாடல்களை கொண்ட முழு பாடல் ஒலிப்பதிவு வெளியிடப்பட்டது.தமிழ், மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்பாடல்கள் மதன் கார்கி, சுபோத் கானோல்கார் மற்றும் வனமாலி ஆகியோரால் முறையே எழுதப்பட்டன.

தமிழ் பாடல் பட்டியல்

[தொகு]

1. இந்தியனே வா - பாடகர்கள்: கார்த்திக், ஏ. ஆர். ரகுமான் - இசை: ஏ. ஆர். ரகுமான்

2. சச்சின் சச்சின் - பாடகர்கள்: சித் ஸ்ரீராம், பூர்வி கௌட்டிஷ், நிகிதா காந்தி - இசை: ஏ. ஆர். ரகுமான்

3. கிரிக்கெட் காரா - பாடகர்கள்: ஏ. ஆர். அமீர், விஷ்வாபிரசாத், அஞ்சலி கைக்வாட் - இசை: ஏ. ஆர். ரகுமான்

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://orissadiary.com/sachin-billion-dreams-made-tax-free-odisha/
  2. சிசோ (09 சூன் 2012). "சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை, சாதனைகளை விளக்கும் புதிய நூல் வெளியீடு". தட்ஸ்கிரிக்கெட். Archived from the original on 2012-06-13. பார்க்கப்பட்ட நாள் 03 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "விளையாட்டு வாழ்க்கையில் கூடிய ஓட்டங்கள் (ஆங்கில மொழியில்)". ஈ. எசு. பி. என். கிரிக்கின்போ. பார்க்கப்பட்ட நாள் 03 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. Flawless Tendulkar 200 gives India series - கிரிக்இன்ஃபோ
  5. https://www.hindustantimes.com/cricket/sachin-tendulkar-holds-screening-of-sachin-a-billion-dreams-for-armed-forces/story-F1l41eY6YNAnqMumYLjacP.html