சண்முகப்பிரியாகருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
திசி என்றழைக்கப்படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.