இடைக்கால இந்திய வரலாறு குறித்த நூல்கள் எழுதியமைக்காக
சதீஷ் சந்திரா (Satish Chandra, 20 நவம்பர் 1922 - 13 அக்டோபர் 2017) [1] என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். இவருடைய முக்கியப் பங்களிப்பாக இடைக்கால இந்திய வரலாறு இருந்தது. [2]
இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு இவர் இளங்கலை (1942), முதுகலை (1944) படிப்பை முடித்தார். ஆர். பி. திரிபாதியை நெறியாளராக கொண்டு மெய்யியலில் முனைவர் (1948) ஆய்வுப் படிப்பை முடித்தார். [4][5] இவரது முனைவர் பட்ட ஆய்வேடு 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கட்சிகள் மற்றும் அரசியல் பற்றியது. [3]
இவர் சாவித்திரியை மணந்தார். மூன்று மகன்கள் இருந்தனர். [6]
1970களில் இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைத் தலைவராகவும் தலைவராகவும் பணியாற்றினார். [7] இவர் 1980 மற்றும் 1986 க்கு இடையில் டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக கவுன்சிலில் பணியாற்றினார். இவர் மேசோன் டேஸ் சயின்சிஸ் டி எனோவில் ஆராய்ச்சி இயக்குநராகவும், பாரிசில் உள்ள சர்வதேச வரலாற்று அறிவியல் பேராயத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். 1988 ஆம் ஆண்டில், உயர் குடிமைப்பணிகளின் நியமன முறையை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு குழுவின் தலைவராக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் இவர் கேட்கப்பட்டார்.
சந்திரா முகலாயர் காலம் குறித்த இந்தியாவின் முன்னணி வரலாற்று அறிஞர்களில் ஒருவராகவும். இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க வரலாற்றாசிரியர்களில் ஒருவராகவும் குறிப்பிடப்படுகிறார். [8] இவரது புத்தகமான, இடைக்கால இந்தியா, இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடநூலாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. [8][7]
இவர் சில சமயங்களில் "இடது சார்பு" என்று குறிப்பிடப்படும் ரொமிலா தாப்பர், ஆர். எஸ். சர்மா, பிபன் சந்திரா, அர்ஜுன் தேவ் ஆகிய வரலாற்றாசிரியர்களின் குழுவைச் சேர்ந்தவராக கருதப்புடுகிறார். [9] 2004 ஆம் ஆண்டில், இவரது பாடநூல் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேசிய பாடத்திட்டத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
The 18th Century in India: Its Economy and the Role of the Marathas, the Jats, the Sikhs, and the Afghans. Calcutta: Centre for Studies in Social Sciences. 1986. இணையக் கணினி நூலக மைய எண்17970100.