சந்திரபிரபா ஐட்வால் (Chandraprabha Aitwal) என்பவர் ஓர் இந்திய மலையேறும் வீராங்கனையாவார். மலையேறும் வீராங்கனைகளின் முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். 1941 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 அன்று இவர் பிறந்தார். வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டி 2009 ஆம் ஆண்டு சந்திரபிரபாவுக்கு டென்சிங் நார்கே தேசிய வீரச்செயல் விருது வழங்கப்பட்டது. இந்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் இவ்விருதை அவருக்கு வழங்கியது[1]. நந்தா தேவி, கஞ்சன்சங்கா, திரிசூலி, யாவோன்லி மலைச்சிகரங்களை சந்திரபிரபா வெற்றிகரமாக ஏறி முடித்தார்[2].
உத்தராகண்டம் மாநிலத்தின் பிதௌரகட் மாவட்டம், தார்சூலாவில் ஐட்வால் பிறந்து வளர்ந்தார்[2].
1981 ஆம் ஆண்டில் நந்தா தேவி உள்ளிட்ட பல மலைச் சிகரங்களை அவர் அடைந்துள்ளார். 1984 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்திய மலையேறும் கூட்டமைப்பின் எவரெசுட்டு சிகரம் அடைதல் என்ற திட்டத்தின் ஓர் அங்கமாகவும் இவர் இருந்தார்[2]. ஆகத்து 2009 இல் இவர் 68 வயதை எட்டியபோது இந்திய மலையேறுதல் சம்மேளனத்தின் அனைத்து பெண்கள் மலையேறும் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இரண்டாவது முறையாக 6,133 மீட்டர் உயர கர்வால் இமயத்திலுள்ள சிறீகாந்தா மலை உச்சியை சந்திரபிரபா அடைந்தார்[3].
{{cite web}}
: Check date values in: |access-date=
(help); Unknown parameter |=
ignored (help)