சாபர் அலி கான் (Zafar Ali Khan 1873– 27 நவம்பர் 1956) ஒரு பாகிஸ்தான் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியப் பேரரசுக்கு எதிரான பாகிஸ்தான் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.[1] இஸ்லாமிய மத விஞ்ஞானங்களைத் தவிர, பொருளாதாரம், சமூகவியல் மற்றும் அரசியல் ஆகியவற்றின் தற்போதைய கோட்பாடுகளை இவர் நன்கு அறிந்திருந்தார். இவர் உருது பத்திரிகையின் தந்தை என்று கருதப்படுகிறார்.[2]
அந்த நேரத்தில் பிரித்தானிய இந்தியாவின் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த சியால்கோட் மாவட்டத்தின் பஞ்சாபி ஜன்ஜுவா குடும்பத்தில் ஜாபர் பிறந்தார். குஜ்ரான்வாலா மாவட்டம், வஜிராபாத்தில் உள்ள மிஷன் உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.[3] பாட்டியாலாவிலிருந்து 10 ஆம் வகுப்பு மற்றும் அலிகார் கல்லூரியில் இடைநிலை 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் . அடுத்து, இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தபால் துறையில் பணியாற்றினார். அதே இடத்தில் தான் அவரின் தந்தையும் பணிபுரிந்தார்.பின்னர் மீண்டும் அலிகார் கல்லூரியில் சேர்ந்து பி. ஏ இளங்கலைப் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற பிறகு கான் முஸ்லீம் அரசியல் தலைவர் மொஹ்சின்-உல்-முல்கின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மும்பை சென்றார் . அதன் பின் இவர் டெக்கான் ஹைதராபாத்தில் மொழிபெயர்ப்பாளராக சிறிது காலம் பணியாற்றினார். உள்துறையின் துறைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய இவர் ஜமீன்தார் எனும் செய்தித்தாளை லாகூரில் தொடங்கினார். இது அவரது தந்தை மலவி சிராஜுதீன் அகமது என்பவரால் நிறுவப்பட்டது.[4]
1930 களில், இவர் அகமதியா இயக்கத்திற்கு எதிராக எழுதத் தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜமீன்தார் செய்தித்தாளில் ஒரு பிரச்சாரத்தை துவங்கினார்.[5]
இவர் தனது தாய்மொழி பஞ்சாபி மொழிக்குப் பதிலாக உருது மொழியினை எழுதத் தேர்வு செய்தார்.அவரது குழந்தை பருவத்திலேயே இவரின் கவிதை மீதான ஆர்வம் தொடங்கியது. அவரது கவிதைகள் மத மற்றும் அரசியல் உணர்வைக் அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.[6] இவர் இசையமைப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். பஹரிஸ்தான் , நிகாரிஸ்தான் மற்றும் சமனிஸ்தான் ஆகிய கவிதைத் தொக்குப்புகளை வெளியிட்டார். அவரது மற்ற படைப்புகளில் மார்கா-இ-மஜாப்-ஓ-சயின்ஸ், கல்பா-இ-ரம், சையர்-இ-சுல்மெட் மற்றும் ஜங்-இ-ரூஸ்-ஓ-ஜப்பான் என்ற ஓபரா ஆகியன குறிப்பிடத்தக்கவை ஆகும்.[7]
பஞ்சாபின் சாஹிவாலில் உள்ள பல்நோக்கு அரங்கமான சாஹிவால் அரங்கத்திற்கு இவரது நினைவாக ஜாபர் அலி அரங்கம் என மறுபெயரிடப்பட்டது. இது கால்பந்து மற்றும் துடுப்பாட்ட விளையாட்டுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அரங்கத்தில் 10,000 பேர் ஒரே நேரத்தில் அமரலாம். பாகிஸ்தான் போஸ்ட் வெளியிட்ட தனது 'சுதந்திரத்தின் முன்னோடிகள்' தொடரில் இவரது நினைவாக ஒரு நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது.[8]
நவம்பர் 27, 1956 அன்று இவர் பஞ்சாபின் வஜிராபாத்தில் காலமானார். அவரது இறுதி சடங்குகளுக்கு அவரது தோழர் முகமது அப்துல் கபூர் ஹசார்வி தலைமை தாங்கினார்.[9]
அவரது குறிப்பிடத்தக்க வெளியீடுகளில் சில:
ஜங்கல் பக் எனும் நூலினை உருது மொழியில் எழுதினார். இது ருட்யார்ட் கிப்ளிங்கின் ஜங்கிள் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகும். அல்-பரூக் : உமரின் வாழ்க்கை