சபாஷ் கார்கி அல்லது சபாஷ்கார்கி (Shahbaz Garhi, or Shahbazgarhi), அசோகரின் கல்வெட்டுகள் கொண்ட கிராமம் ஆகும். இக்கிராமம் பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 293 மீட்டர் (964 அடி) உயரத்தில் உள்ளது.[1]
இமயமலையில் பசுமை சூழ்ந்த சபாஷ் கார்கி கிராமம், மார்தன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மார்தன் நகரத்திலிருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பழைய காலத்தில் படை வீரர்கள் இக்கிராமத்தில் தங்கி இளைப்பறிச் செல்வர். வரலாற்றுச் சிறப்பு மிக்க அசோகரின் கல்வெட்டுகளின் ஒன்று சபாஷ் கார்கி கிராமத்தில் உள்ளது.[2] அசோகரின் மௌரியப் பேரரசில் சபாஷ் கார்கி பௌத்தர்களின் நகரமாக விளங்கியது. பண்டைய காலத்தில் சபாஷ் கார்கியைச் சுற்றிலும் பிக்குகளின் வழிபாட்டுத் தலமான சைத்தியங்களும், தூபிகளும் கொண்டிருந்தது.
சபாஷ் கார்கி நகரம் மூன்று பண்டைய நகரங்களை இணைக்கும் வழியில் உள்ளது. அவைகள்:
பழம்பெரும் பாறைக் கல்வெட்டுகள் கொண்டிருக்கும் சபாஷ் கார்கி நகரத்தில்,[3] இரண்டு பெரிய பாறைகளில் கரோஷ்டி எழுத்து முறையில் எழுதப்பட்ட கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது.[4] இப்பாறை கல்வெட்டுகள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் (கிமு 272 - 231 ), மௌரியப் பேரரசர் அசோகரின் ஆணையால் நிறுவப்பட்டது.[4] [4]
சபாஷ் கார்கியின் இப்பாறைக் கல்வெட்டுகளை யுனெஸ்கொ நிறுவனம் உலகப் பாரம்பரிய பண்பாட்டுக் களங்களில் ஒன்றாக 30 சனவரி 2004 அன்று அறிவித்துள்ளது. [4][5]கரோஷ்டி மொழியில் எழுதப்பட்ட இப்பாறைக் கல்வெட்டுகளின் குறிப்புகளை மொழிபெயர்த்து அருகில் உள்ள பலகையில் எழுதப்பட்டுள்ளது.