ஜமீர் கான் (பிறப்பு 16 மார்ச் 1992) ஒரு ஆப்கான் துடுப்பாட்ட வீரர் . கான் ஒரு இடது கை மட்டையாளர், மற்றும் மெதுவான இடது கை மரபுவழா சுழற் பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் தற்போது தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விலையாடவில்லை.
2017 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்டு விளையாடியது.29 ஜனவரி அன்று ஜிம்பாப்வே அ துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆப்கானித்தான் அ அணிக்காக பட்டிலயல் அ துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகப்படுத்தினார்.[1] 1 நவம்பர் 2017 அன்று நடைபெற்ற 2017–18 ஆண்டிற்கான அஹ்மத் ஷா அப்தாலி 4 நாள் போட்டியில் ஸ்பீன் கர் பிராந்தியத்திற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.[2]
செப்டம்பர் 2018 இல், ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியின் முதல் பதிப்பில் இவர் காபூல் அணியில் இடம் பெற்றார்.[3]
2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற அலோக்சே அகமது ஷா அப்தலி நான்கு நாள் கொண்ட போட்டியில் இவர் விளையாடினார். நவம்பர் 1, காபூல் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற பூஸ்ட் பிரிவு துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 32 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்து அப்த்ல் பகி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் இரண்டு நான்குகளும் அடங்கும்.பின் பந்துவீச்சில் 12 ஓவர்கள் வீசி 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி 4 இலக்குகளைக் கைப்பற்றினார்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 7 பந்துகளில் ஓர் ஓட்டங்களை எடுத்து அசனுல்ல பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். 23 ஓவர்கள் வீசி 61 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் நான்கு ஓவர்களை மெய்டனாக வீசி ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இசுப்பீட் கர் அனி 182 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற அலோக்சே அகமது ஷா அப்தலி நான்கு நாள் கொண்ட போட்டியில் இவர் விளையாடினார். ஏப்ரல் 1, அமனுல்லா துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற காபூல் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 70 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து சாம் சராம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் ஐந்து நான்குகளும் அடங்கும்.பின் பந்துவீச்சில் 8 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் ஓர் ஓவரை மெய்டனாக வீசி ஓர் இலக்கினைக் கைப்பற்றினார்.இரண்டாவது ஆட்டப் பகுதியில் 1 ஓவர்கள் வீசி 8ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இந்தப் போட்டியில் இசுப்பீட் கர் அனி 157 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[5]