சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி Social Democratic Harmony Party Parti Kesejahteraan Demokratik Masyarakat | |
---|---|
சுருக்கக்குறி | KDM |
தலைவர் | பீட்டர் அந்தோனி Peter Anthony |
நிறுவனர் | பீட்டர் ஆண்டனி சூயில் நுவாடிம் |
தொடக்கம் | 28 சனவரி 2022 |
பிரிவு | சபா பாரம்பரிய கட்சி (WARISAN) |
தலைமையகம் | தெனோம், சபா |
கொள்கை | சபா பிராந்தியத் தன்மை பல இனவாதம் கடசான்-டூசுன் ஆதரவு |
தேசியக் கூட்டணி | பிராந்திய பங்காளிகள் சபா மக்கள் கூட்டணி (GRS) (2022) |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 1 / 26 (சபா லபுவான்) |
சபா மாநில சட்டமன்றம்: | 2 / 79 |
சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி அல்லது கேடிஎம் (ஆங்கிலம்: Social Democratic Harmony Party அல்லது (KDM Party); மலாய்: Parti Kesejahteraan Demokratik Masyarakat (KDM); சீனம்: 社会民主和谐党) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் இயங்கும் ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி பீட்டர் ஆண்டனி மற்றும் சூயில் நுவாடிம் ஆகியோரால் 28 சனவரி 2022-இல் நிறுவப்பட்டது.[1][2][3]
இது கடசான்-டூசுன் மற்றும் மூருட் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது ஆளும் சபா மக்கள் கூட்டணி அரசாங்கத்துடன் ஒரு பங்காளிக் கட்சியாகச் செயல்படுகிறது.[4][5]
சபா மாநிலத்தின் கடசான்-டூசுன் மற்றும் மூருட் சமூகங்களைப் பொதுவாகக் குறிப்பிடும் கேடிஎம் (KDM) என்ற சுருக்கத்தை இந்தக் கட்சி தேர்ந்தெடுத்தது.[6][7]
2020-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில் அப்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல்; தனிப் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி; சபா மக்கள் கூட்டணி (GRS) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சபாவின் ஆளும் கட்சியாகத் தகுதி பெற்றது.
அதன் தொடர்ச்சியாக சபா மக்கள் கூட்டணி இன்றும் ஆட்சியில் உள்ளது.