சம்போர்னாவின் இல்லம் (House of Sampoerna) என்பது சுராபாயாவில் அமைந்துள்ள சம்போர்னாவின் தலைமையகம் புகையிலை அருங்காட்சியகம் மற்றும் ஆகும். டச்சு காலனித்துவ பாணியின் தாக்கத்தில் அமைந்துள்ள முதன்மைக் கட்டிடத்தின் கட்டடக்கலை பாணியில் அமைந்த வளாகம் 1862 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். தற்போது இது பாதுகாக்கப்பட்ட வரலாற்று தளமாக அமைந்துள்ளது. முன்பு டச்சுக்காரர்களால் ஆதரவற்றோர் இல்லமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கட்டடம் 1932 ஆம் ஆண்டில் சம்போர்னாவின் நிறுவனரான லீம் சீங் டீ என்பவரால் வாங்கப்பட்டது. அவர் இதனை முதன் முதலாக சிகரெட் உற்பத்தியை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். இந்த வளாகத்தில் பெரிய அளவில் அமைந்த மத்திய ஆடிட்டோரியம், கிழக்கு மற்றும் மேற்கு பக்கங்களில் இரண்டு சிறிய கட்டிடங்கள் மற்றும் மத்திய ஆடிட்டோரியத்தின் பின் புறத்தில் ஏராளமான பெரிய அளவுலான, ஒற்றைத் தளத்தைக் கொண்ட, திறந்தவெளி அமைப்புகளைக் கொண்ட பல கட்டட அமைப்புகள் காணப்படுகின்றன. அதன் பக்கத்தில் காணப்படுகின்ற கட்டிடங்கள் குடும்ப குடியிருப்புகளாக மாற்றப்பட்டன. பெரிய கிடங்கு போன்ற பாணியில் அமைந்திருந்த கட்டட அமைப்புகள் புகையிலை மற்றும் கிராம்பு பதப்படுத்துதல்‚ கலத்தல்‚ கையால் புகையிலை உருட்டுதல் மற்றும் பேக்கிங் செய்தல், மேலே அச்சிடுதல் போன்றவற்றிற்காகவும், அனைத்துப் பணிகளும் முடிந்த பின்னர் உருவாக்கம் பெற்ற பொருட்களை பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கான வசதிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சம்போர்னாவின் 90 வது ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில், மத்திய வளாகம் சிரமமின்றி மீட்டெடுக்கப்பட்டு, புது வடிவம் தரப்பட்டு தற்போது பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. மத்திய ஆடிட்டோரியத்தில் தற்போது ஒரு அருங்காட்சியகம் மற்றும் ஒரு கடையினைக் கொண்டு அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் ஒரு சிற்றுண்டி விடுதியும், ஒரு கலைக்கூடமும் உள்ளன. அவை தனித்தன்மை கொண்ட கட்டட அமைப்புகளைக் கொண்டு காணப்படுகின்றன. மேற்கு பக்கத்தில் உள்ள கட்டிடம் அலுவல்ரீதியாக அவர்களுடைய பூர்வ குடும்ப இல்லமாக இருந்து வருகிறது.
முதலில், இந்த கட்டிடம் டச்சுக்காரர்களால் நிர்வகிக்கப்படும் ஆதரவற்றோம் இல்லமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் 1932 ஆம் ஆண்டில், அதை லீம் சீங் டீ என்பவர் வாங்கினார், இது சம்போர்னாவின் முதல் பெரிய சிகரெட் உற்பத்தி செய்யும் இடமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரால் வாங்கப்பட்டது.[1]
சம்போர்னாவின் இல்லம் எனப்படுகின்ற இந்த அருங்காட்சியகம் பல கட்டிடங்களைக் கொண்டு அமைந்துள்ளது; ஒரு முதன்மைக் கட்டிடம் மற்றும் இரண்டு கூடுதல் கட்டிடங்கள் உள்ளன. முதன்மை கட்டிடத்தின் இடது மற்றும் வலது பக்கத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைந்துள்ளன. முதன்மைக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது, முதல் தளத்தில் சம்போர்னாவின் நிறுவனரின் புகைப்படங்கள், சிறிய அளவிலான மளிகைக் கடைகள், சம்போர்னா குடும்பத்தினர் பயன்படுத்திய கபாயாவின் சேகரிப்புகள், உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு வகையான பொருள்கள் உள்ளிட்ட பல சேகரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது தளத்தில், வழக்கமான சூரபயா தொடர்பான இதழ்களை விற்கும் காட்சியகங்கள் மற்றும் சம்போர்னா தயாரிக்கும் சிகரெட்டுகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் அல்லது படங்களை எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. சம்போர்னாவின் இல்லத்தில் அமைந்துள்ள முதன்மைக் கட்டிடத்திற்கு அடுத்தபடியாக ஒரு சொகுசு மகிழ்வுந்து நிறுத்தத்தில் காட்சிக்கப்பட்டுள்ளது. அது அந்த கட்டடத்தைப் போலவே பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இந்த கார் பிரித்தானிய 1972 ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ வகையைச் சேர்ந்த மகிழ்வுந்து ஆகும். இந்த மகிழ்வுந்து சம்போர்னா குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது ஆகும்.
சுராபாயா ஹெரிடேஜ் பிரிவு (எஸ்.எச்.டி) திட்டம் வடக்கு சுராபாயாவைச் சுற்றியுள்ளப் பகுதிகளைப் பார்வையிடுவதற்காக உள்ள பேருந்து பயண வசதியை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வடக்கு சுராபாயா என்பது பழைய சுராபாயா என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்த டிராமின் மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு பேருந்தைப் பயன்படுத்தி, இங்கு பயணித்து வரலாற்றுத் தேடலை இங்கு வருவோர் மேற்கொண்டு ரசிக்க வாய்ப்பு உள்ளது. வரலாற்றின் நகரம் என்று நன்கு அறியப்பட்ட சூரபயாவின் கட்டிடங்களையும் வரலாற்றையும் அதன்முலமாக அறிந்து கொள்ளலாம், " பாபாத் சுராபாயா" பாரம்பரிய வரலாறு, சிறந்த பண்பாடு மற்றும் சூரபயாவில் பார்க்க வேண்டிய பிற ரசிக்கத்தக்க இடங்களைப் பற்றிய தகவல்களையும் இங்கு பெறலாம்.[2]
வழக்கமான சுற்றுப்பயணங்கள் | தினம் | அட்டவணை நேரம் |
வாரநாள் | செவ்வாய் முதல் வியாழன் வரை | |
சுராபாயா - ஹீரோஸ் நகரம் (ஹீரோஸ் நினைவுச்சின்னம் - பிடிபிஎன் XI) | 1. 10:00 - 11:00 | |
சுராபாயா - வர்த்தக நகரம் (ஹோக் ஆங் கியோங் கோயில் - எஸ்காம்ப்டோ வங்கி) | 2. 13:00 - 14:00 | |
டச்சு ஆக்கிரமிப்பின் போது சுராபாயா (கெபோன்ரோஜோ தபால் அலுவலகம் - கெபன்ஜென் சர்ச் - முன்னாள் டி ஜாவாஷே வங்கி) | 3. 15:00 - 16:30 | |
வார இறுதி நாள்கள் | வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை | |
சுராபாயாவை ஆராய்தல் (சிட்டி ஹால் - முன்னாள் டி ஜாவாஷே வங்கி) | 1. 10:00 - 11:30 | |
சுராபாயா-ஹீரோஸ் நகரம் (ஹீரோஸ் நினைவுச்சின்னம் - பி.டி.பி.என் லெவன்) | 2. 13:00 - 14:30 | |
பாபாத் சுராபாயா (கம்புங் க்ராட்டன் - சிட்டி ஹால் - காக் துராசிம்) | 3. 15:00 - 16:30 |