சரவாக் கம்யூனிச கிளர்ச்சி Communist insurgency in Sarawak Pemberontakan Komunis di Sarawak |
|||||||
---|---|---|---|---|---|---|---|
மலேசிய ஒப்பந்தம், இந்தோனேசியா - மலேசியா மோதல், மலேசியாவில் கம்யூனிச கிளர்ச்சி (1968 - 1989) பனிப்போர் பகுதி |
|||||||
கம்யூனிச கெரில்லாக்களுடனான ஒத்துழைப்பைத் தடுப்பது; இந்தோனேசிய ஊடுருவல்காரர்களிடம் இருந்து பாதுகாப்பது; சீனர் கிராமவாசிகளுக்கு ஆயுதம் ஏந்திய வீரர்களின் பாதுகாப்பு (1965) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கம்யூனிச எதிர்ப்பு படைகள்: ஐக்கிய இராச்சியம்[5]
ஆதரவு: இந்தோனேசியா (1965-க்கு பின்னர்)[1] | கம்யூனிசப் படைகள்: வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி[6] இந்தோனேசியா (1962–65) (இராணுவ உதவி)[1]
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வால்டர் வாக்கர் (1962–1965) துங்கு அப்துல் ரகுமான் அப்துல் ரசாக் உசேன் உசேன் ஓன் மகாதீர் பின் முகமது இசுடீபன் காலோங் நிங்கான் (1963–1966) தாவி சிலி (1966–1970) அப்துல் இரகுமான் யாக்கோப்பு (1970–1981) அப்துல் தாயிப்பு முகமது (1981–1990) பிரிகேடியர் ஒசுமான் இபுராகிம் பிரிகேடியர் உங்கு நசருதின் சுகார்த்தோ (from 1965) | போங் கீ சோக் யாங் சு சுங் வென் மிங் சியுவான் யாப் சூன் ஆவ் லாம் வா குவாய் அங் சு டிங் வோங் லியெங் குய் சியுங் ஆ வா சுகர்ணோ (until 1965) |
||||||
பலம் | |||||||
1,500+ ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் வீரர்கள்[10][11]
10,000 (1968) | 600–1,000+ guerilla fighters[10][13]
|
||||||
இழப்புகள் | |||||||
99 பேர் கொல்லப்பட்டனர் 144 பேர் காயமடைந்தனர் ≈2,000 இந்தோனேசிய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்[7](கணிப்புகள்) | ----
நூற்றுக்கணக்கான இந்தோனேசிய ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டனர் |
||||||
≈19 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[10][14] | |||||||
Statistics source:[15] |
சரவாக் கம்யூனிச கிளர்ச்சி (ஆங்கிலம்: Communist Insurgency in Sarawak (MA63); மலாய்: Pemberontakan Komunis di Sarawak; சீனம்: 砂拉越共產黨叛亂) என்பது 1962--ஆம் ஆண்டில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் நடைபெற்ற ஒரு கிளர்ச்சி ஆகும். இந்தக் கிளர்ச்சி இந்தோனேசியா, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கும் (North Kalimantan Communist Party) மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கும் (Malaysian Government) இடையே நடந்தது.
பனிப்போர் (Cold War) காலத்தில் முன்னாள் பிரித்தானிய மலேசியாவிற்குச் (British Colony of Malaysia) சவால் விடுத்த இரண்டு கம்யூனிச கிளர்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஏற்கனவே 1948–இல் இருந்து 1960 வரை மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency) போது ஒரு கம்யூனிச கிளர்ச்சி நடைபெற்று உள்ளது.
சரவாக்கின் கம்யூனிசக் கிளர்ச்சியில், பெரும்பாலும் சீனர்கள். சரவாக் கம்யூனிச கிளர்ச்சியாளர்களாகச் (Sarawak Communist Insurgents) செயல்பட்டனர். இவர்கள் சரவாக் மீதான பிரித்தானிய சரவாக் முடியாட்சியை எதிர்த்தனர்; பின்னர் புதிதாக உருவாக்கப்பட்ட மலேசியா கூட்டமைப்புடன் சரவாக் மாநிலத்தை இணைப்பதையும் எதிர்த்தனர். அத்துடன் 18-அம்ச உடன்படிக்கையை முற்றாக நிராகரித்தனர்.[2]
சரவாக் கம்யூனிச கிளர்ச்சியானது; 1962-ஆம் ஆண்டு புரூணை கிளர்ச்சியின் (1962 Brunei Revolt) மூலமாகத் தூண்டப்பட்டது. மலேசியா உருவாக்கத்திற்கு முன்மொழியப்பட்ட (Proposed Formation of Malaysia) பரிந்துரைகளைப் புரூணையின் இடதுசாரி புரூணை மக்கள் கட்சி (Brunei People's Party) எதிர்த்தது. அந்த எதிர்ப்பின் மூலமாக சரவாக் கம்யூனிச கிளர்ச்சி உருவகம் பெற்றது.[5]
1965-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா அரசாங்கமும், சரவாக் கம்யூனிச கிளர்ச்சியாளர்களை ஆதரித்து வந்தது. இருப்பினும், மேற்கத்திய சார்பு கொண்ட அதிபர் சுகார்த்தோ (Pro-Western President), இந்தோனேசியாவின் அதிபர் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் மலேசியாவுடனான மோதலை (Indonesia–Malaysia Confrontation) ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.
சரவாக்கின் கம்யூனிச கிளர்ச்சியின் போது, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில் இரண்டு முக்கிய இராணுவப் படைகள் உருவாக்கப்பட்டன:
இந்தோனேசியாவின் மலேசியா மீதான மோதலின் முடிவைத் தொடர்ந்து, இந்தோனேசிய இராணுவப் படைகள் மலேசிய இராணுவப் படைகளுடன் ஒத்துழைக்கத் தொடங்கின. அத்துடன் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளிலும் (Counter-Insurgency Operations) ஒத்துழைப்பை வழங்கின.[1][5]
சரவாக்கில் முன்பு சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL); சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) (SAYA) உட்பட பல கம்யூனிச மற்றும் இடதுசாரி குழுக்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. அதன் மூலம், 1970 மார்ச் மாதம் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி நிறுவப்பட்டது.[7]
கிளர்ச்சியை அமைதிப்படுத்தும் வகையில், 1965-ஆம் ஆண்டு, சரவாக் முதல் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவுப் பகுதிகளில்; கூச்சிங் - செரியான் சாலையில் மலேசிய மத்திய அரசு பல கட்டுப்பாட்டுப் பகுதிகளை (Controlled Areas) உருவாக்கியது.
அந்தக் கட்டத்தில் (1973 - 1974) சரவாக் முதல்வராக இருந்த அப்துல் ரகுமான் யாகூப் (Abdul Rahman Ya'kub); வடக்கு கலிமந்தன் கம்யூனிச கட்சி கிளர்ச்சியாளர்களைச் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்தார். அந்த வகையில் கிளர்ச்சியாளர்கள் பலர் ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
1989-இல் மலேசிய அரசாங்கத்திற்கும்; மலாயா கம்யூனிஸ்டு கட்சிக்கும் (Malayan Communist Party) இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி கிளர்ச்சியாளர்கள் 17 அக்டோபர் 1990-இல் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் சரவாக் கம்யூனிச கிளர்ச்சி முறைப்படி ஒரு முடிவுக்கு வந்தது.[7][2]
தீபகற்ப மலேசியாவில் 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசிய கம்யூனிச கிளர்ச்சியை (Communist insurgency in Malaysia (1968–89) தவிர, போர்னியோ தீவில் உள்ள மலேசிய மாநிலமான சரவாக் மாநிலத்திலும் மற்றொரு கிளர்ச்சி உருவாக்கப்பட்டது.[16]
சரவாக்கில் உள்ள கம்யூனிச இயக்கங்கள், பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் (Japanese Occupation of British Borneo) போது ’சரவாக் எதிர்ப்பு பாசிச இயக்கம்’ (Sarawak Anti-Fascist League) என்ற ஒரு இயக்கத்தின் மூலமாக முதலில் செயல்பட்டு வந்தன. இந்த இயக்கம் ஒரு தளர்வான இயக்கம் (Loose Movement). 1942-ஆம் ஆண்டில் இருந்து இந்த இயக்கத்தின் வேர்களைக் கண்டறிய முடிகிறது.
1949-இல் மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) நிறுவப்பட்ட பிறகு, சரவாக் வெளிநாட்டுச் சீன சனநாயக இளைஞர் கழகம் (Sarawak Overseas Chinese Democratic Youth League) உருவாக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில், சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL) போன்ற பல சிறிய கம்யூனிச குழுக்களை உள்வாங்கி, சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1971-இல் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (North Kalimantan Communist Party) நிறுவப்பட்டது.[17]
சரவாக் கம்யூனிச இயக்கங்கள் பெரும்பாலும் சீன இனத்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன. உள்நாட்டுப் பழங்குடி மக்களிடம் இருந்து அதிக ஆதரவைப் பெற இயலவில்லை. ஏறக்குறைய 10% தயாக்கு ஆதரவாளர்களை (Dayak People) சேர்த்துக் கொள்ள முடிந்தது.[18]
மலாய்க்காரர்கள் மற்றும் பிற பூர்வீக சரவாக் இனத்தவர்களிடம் இருந்து சிறிய அளவிலான ஆதரவை மட்டுமே பெற முடிந்தது. இருப்பினும் தயாக்கு மக்களைச் சேர்த்துக் கொள்ள வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.[19][17][19]
1964-ஆம் ஆண்டில், வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில், நன்கு பயிற்சி பெற்ற கம்யூனிச பங்கேற்பாளர்கள் 800 - 1,000 பேர் இருந்ததாக அரசாங்க சான்றுகள் மதிப்பிட்டுள்ளன. தவிர சரவாக் கம்யூனிச இயக்கங்களில் ஒட்டு மொத்தமாக 24,000 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.[20]