சரவாக் மாநிலச் சின்னம்

சரவாக் மாநிலச் சின்னம்
Coat of arms of Sarawak
விவரங்கள்
பயன்படுத்துவோர்சரவாக்
உள்வாங்கப்பட்டது1988
விருதுமுகம்Sarawak State Flag
ஆதரவுஒரு காண்டாமிருக இருவாச்சி, மாநிலச்சின்னத்தின் சுருளைப் பற்றிக் கொள்ளும் காட்சி
குறிக்கோளுரைஒற்றுமை, முயற்சி, சேவை
(Bersatu, Berusaha, Berbakti)
("Unity, Effort, Service")

சரவாக் மாநிலச் சின்னம் (ஆங்கிலம்: Coat of arms of Sarawak; மலாய்: Jata Sarawak) என்பது சரவாக் மாநிலத்தின் சிறப்புரிமை பெற்ற சின்னம் ஆகும்.[1]

1973 ஆகஸ்டு 31-ஆம் தேதி சிறப்புரிமைச் சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இந்தச் சின்னம் 1988 ஆகஸ்டு 31-ஆம் தேதியில் புதிய உருவாக்கம் பெற்றது..

பொது

[தொகு]

காண்டாமிருக இருவாச்சியின் இறக்கைகள் 13 இறகுகளைக் கொண்டுள்ளன. அவை மலேசியாவில் உள்ள பதின் முன்று மாநிலங்களைக் குறிக்கின்றன.[1]

செம்பருத்தி மலர் மலேசியாவின் தேசிய மலரைக் குறிக்கின்றது. Bersatu, Berusaha, Berbakti எனும் மலாய்ச் சொற்கள் "ஒற்றுமை, முயற்சி, சேவை" என்று பொருள்படும்.[1][2]

வரலாறு

[தொகு]

1842-ஆம் ஆண்டில் ஒரு பிரித்தானிய அதிகாரியான ஜேம்சு புரூக் என்பவரால் சரவாக் மாநிலம் நிறுவப்பட்டது. புரூணை சுல்தானுக்கு ஜேம்சு புரூக் வழங்கிய இராணுவ உதவிக்கான வெகுமதியாக புரூணை சுல்தானால் சரவாக் மாநிலம் வழங்கப்பட்டது.[3]

அந்தக் காலக்கட்டத்தில் (1840-ஆம் ஆண்டுகளில்) சரவாக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்தக் கடல் கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

1842-ஆம் ஆண்டில், புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். அந்தக் காலக் கட்டத்தில்தான் சரவாக் மாநிலத்தின் முதலாவது அரசு சின்னம் உருவாக்கப்பட்டது.

வரலாற்றுச் சின்னங்கள்

[தொகு]
சரவாக் மாநில வரலாற்றுச் சின்னங்கள்
சரவாக் மாநிலச் சின்னம் (1988).
சரவாக் மாநிலச் சின்னம் (1973-1988).

நகரம், மாவட்டம் மற்றும் நகராட்சி சின்னங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.
  2. "Symbols of Sarawak's glory and pride". Borneo Post Online. 21 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.
  3. "Arms (crest) of Sarawak". Heraldry of the World (in ஆங்கிலம்). 29 January 2024. பார்க்கப்பட்ட நாள் 26 August 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]