சராய் ஆலம்கிர்

Sarai Alamgir
سرائے عالمگیر
சராயி ஆலம்கிர் பகுதியிலிருந்து ஜீலம் ஆற்றின் மேலே கட்டப்பட்ட பாலம்
சராயி ஆலம்கிர் பகுதியிலிருந்து ஜீலம் ஆற்றின் மேலே கட்டப்பட்ட பாலம்
Sarai Alamgir سرائے عالمگیر is located in பாக்கித்தான்
Sarai Alamgir سرائے عالمگیر
Sarai Alamgir
سرائے عالمگیر
பாக்கித்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 32°54′N 73°45′E / 32.900°N 73.750°E / 32.900; 73.750
நாடுபாக்கித்தான்
பிராந்தியம்பஞ்சாப்
மாவட்டம்குசராத்து
நகரங்கள்4
மக்கள்தொகை
 • மொத்தம்350 288 (estimated as per March 2,016).
நேர வலயம்ஒசநே+5 (பாக்கிதானிய நேர வலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (பாக்கிதானிய நேர வலயம்)
தொலைபேசி இணைப்பு எண்
50000

சராய் ஆலம்கிர் (Sarai Alamgir) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கே குசராத்து மாவட்டத்தில் அமைந்துள்ள சராய் ஆலம்கிர் வட்டத்திலுள்ள முக்கிய நகரமாகும். சராய் ஆலம்கிர் குசராத்து மாவட்டத்தின் நான்கு வட்டங்களில் ஒன்றாகும். [1] [2] [3]

சாராய் ஆலம்கிர் ஜீலம் ஆற்றின் கிழக்குக் கரையில் 575 கிமீ2 (222 சது மை) பரப்பளவில், பெரிய நகரமான ஜீலத்தின் குறுக்கே அமைந்துள்ளது. ஊருக்கு கிழக்கே மேல் ஜீலம் கால்வாய் உள்ளது. சாராய் ஆலம்கிர் 1976 இல் நகராட்சி நிலைக்கு உயர்த்தப்பட்டது. 2001 இல் மாநகராட்சி தகுதி வழங்கப்பட்டது. [1]

புவியியல்

[தொகு]

சாராய் 32°54′00″ வடக்கிலும் 73°45′00″கிழக்கிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 232 மீ (761 அடி) உயரத்தில் உள்ளது. கோடை காலத்தில், வெப்பநிலை சிறுது காலத்திற்கு 45 °C (113 °F) ஐ எட்டும். குளிர்காலங்களில் மிதமானதாகவே இருக்கும். ப்போஓட்ஃஊ வெப்பநிலை அரிதாக 1 °C (34 °F)க்கு கீழே குறையும். சராய் ஆலம்கிர் ஜீலம் நகரின் தெற்கே அமைந்துள்ளது. இது ஜீலம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. சராய்க்கு வடக்கே மிர்புரே, பிம்பர் நகரங்கள் உள்ளன. மண்டி பகாவுதீன் மற்றும் ரசூல் ஆகியவை சராய் ஆலம்கிரின் தெற்கே அமைந்துள்ளன

வரலாறு

[தொகு]

பண்டைய வரலாற்றில், இப்பகுதி சிந்து சமவெளி நாகரிகத்திலும், காந்தார நாகரிகத்திலும் பங்கேற்றது. பிந்தைய தேதியில், [[பேரரசர் அலெக்சாந்தர் மற்றும் போரஸின் படைகளுக்கு இடையில் செலம் போர் நடந்தது.[4] [3] கடந்த காலங்களில், செல்வாக்கு உள்ளவர்கள் ஒரு கேரவன்செராயைக் கட்டுவார்கள். அது பயணிகளுக்கான ஓய்வு இல்லங்களாக இருந்தது. ஒரு பொதுவான சராய் ஒரு குடிநீர் கிணறு, ஒரு பிரார்த்தனை பகுதி மற்றும் மக்கள் ஓய்வெடுக்கும் இடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். [3]

சராய் ஆலம்கிரில் உள்ள 'சராய்' (ஓய்வு பகுதி) முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் நிறுவப்பட்டது. ஏனெனில் அதன் மூலோபாய இடம் பெரும் தலைநெடுஞ்சாலை மற்றும் ஜீலம் ஆறு மற்றும் காஷ்மீருக்கு அருகாமையில் உள்ளது. காலப்போக்கில், சராய் ஆலம்கிர் அருகிலுள்ள கிராம மக்களுக்கான மைய நகரமாக வளர்ந்தது.

3 மார்ச் 1922 இல் ஐந்தாம் ஜார்ஜ் அரச கழக இந்திய இராணுவப் பள்ளி நிறுவப்பட்டபோது சராய் ஆலம்கிர் முக்கியத்துவம் பெற்றது. அரச கழக இந்திய இராணுவத்தின் உறுப்பினர்களின் மகன்களுக்குப் பயனளிக்கும் வகையில் பிரித்தானிய இந்தியாவில் உள்ள நான்கு இராணுவப் பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கல்லூரி இப்போது ஜீலம் இராணுவக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பாக்கித்தானின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். [3]

சுற்றியுள்ள முக்கியமான இடங்கள்

[தொகு]

சராய் ஆலம்கிர் என்பது பழங்கால பெரும் தலைநெடுஞ்சாலைக்கும்]] ஜீலம் ஆற்றுக்கும் இடையே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குறுக்கு சாலையாகும். [3] செலம் போரின் தளங்கள், வரலாற்று மற்றும் பழமையான அலெக்சாந்திரியா நகரமான புசெபெலஸ் (அல்லது புசெபாலா) மற்றும் மிகப்பெரிய ரோடாசு கோட்டை ஆகியவை அருகிலேயே உள்ளன.[4] [5]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Sarai Alamgir". பார்க்கப்பட்ட நாள் 21 January 2023.
  2. PML-N's 'long march' begins from Lahore's Model Town Business Recorder (newspaper), Published 27 March 2022, Retrieved 20 January 2023
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 (Irfan Shareef) Sarai Alamgir The Nation (newspaper), Published 9 April 2021, Retrieved 20 January 2023
  4. 4.0 4.1 Battle between Alexander the Great and King Porus near Sarai Alamgir and Jhelum area on livius.org website, Retrieved 20 January 2023
  5. Rohtas Fort article on The Nation (newspaper) Published 3 June 2013, Retrieved 20 January 2023