சர்னி என்பது இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள பேதுல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.[1] இது மத்திய பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகராட்சி பகுதி ஆகும். சர்னி நகராட்சி கூட்டமைப்பு நான்கு முக்கிய நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன சர்னி, பதகேரா, ஷோபாபூர் காலனி மற்றும் பாக்தோனா என்பனவாகும். சதானி சபுரா வெப்ப மின் நிலையம் மற்றும் டபிள்யூ.சி.எல் (வெஸ்டர்ன் நிலக்கரி பீல்ட்ஸ் லிமிடெட் ) சுரங்கங்களுக்கு பிரபலமானது.
கோண்டு பழங்குடியினர் வாழும் பகுதியாக சர்னி அறியப்படுகின்றது. பதினான்காம் மற்றும் பதினைந்தாம் நூற்றாண்டில் கோண்டு மக்களின் இப்பகுதி ராசபுத்திரர்களால் ஊடுருவப்பட்டது. அவரகள் நர்மதா பள்ளத்தாக்கின் பல பகுதிகளை விவசாயத்திற்காக மீட்டெடுப்பதில் வெற்றி பெற்றார்கள். கோண்டு மக்கள் வேட்டையாடுதல் மற்றும் சாகுபடி ஆகியவற்றைத் தொடர உயர் பீடபூமிகள் மற்றும் சரிவுகளுக்கு தள்ளப்பட்டனர். பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டியர்களுக்கும், முகாலயர்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக இந்த பகுதி அமைதியின்மையைக் கண்டது. 1818 ஆம் ஆண்டில் இப்பகுதி பிரித்தானியர் ஆட்சிக்கு உட்பட்டது. [சான்று தேவை]
சர்னி நகரம் 36 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சர்னி நகராட்சியில் 86,141 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 44,928 ஆண்களும், 41,213 பெண்களும் உள்ளனர். ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8096 ஆகும். இது சர்னி நகராட்சியின் மொத்த மக்கட் தொகையில் 9.40% ஆகும்.[1]
சர்னி நகராட்சியில் 1000 ஆண்களுக்கு 917 என்ற பெண் பாலின விகிதம் காணப்படுகின்றது. இது மாநில சராசரியான 931 ஐ விட குறைவாகும். 2011 ஆம் ஆண்டில் சர்னியின் மொத்த கல்வியறிவு விகிதம் 84.59% ஆக இருந்தது. மத்திய பிரதேசத்தின் சராசரி கல்வியறிவு விகிதத்தை விட 69.32% அதிகமாகும். மொத்த மக்கட் தொகையில் 66,018 பேர் எழுத்தறிவு உடையவர்கள். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 36,675 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 29,343 ஆகவும் உள்ளது. மேலும் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 90.05% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 78.63% ஆகவும் இருந்தது. பட்டியல் சாதியை சேர்ந்தோர் (எஸ்சி) 25% வீதம் ஆகவும், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) சார்னியின் மொத்த மக்கட் தொகையில் 9.5% ஆகவும் உள்ளனர்.[2]
கடந்த 10 ஆண்டுகளில் நகரத்தின் மக்கட் தொகை -9.3% வீதமாக குறைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு மொத்த மக்கட் தொகை சுமார் 95000 ஆக காணப்பட்டது.[சான்று தேவை]
சர்னி ஆண்டு முழுவதும் சிறந்த காலநிலையைக் கொண்டது. பருவமழைக் காலத்தில் இதன் காடுகள், மலைகள், பள்ளத்தாக்கு மற்றும் நீர்வீழ்ச்சிகள் புத்துயிர் பெறுகின்றன. குளிரான மாதம் சனவரி மாதமாகும். மிகவும் வெப்பமான மாதம் மே மாதமாகும். நகரின் சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 1069.2 மி.மீ. ஆகும். இந்நகரின் அதிகபட்ச வெப்பநிலை 42.5 °C வரை எட்டக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 5.4 C வரை குறைகிறது.
சர்னி தலைநகர் போபாலுக்கு தெற்கே சுமார் 200 கிமீ (120 மைல்) தொலைவிலும், நாக்பூருக்கு வடக்கே சுமார் 225 கிமீ (140 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சாலை மற்றும் இரயில் பாதைகள் வழியாக இந்த நகரை அணுகலாம். அனைத்து சாலைகளும் சர்னியை நாக்பூர்-போபால் தேசிய நெடுஞ்சாலை NH 69 உடன் இணைக்கின்றன. இதனால் இந்நகர் அருகிலுள்ள போபால் மற்றும் நாக்பூர் ஆகிய இரு விமான நிலையங்களிலிருந்தும் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கிறது. இது சிந்த்வாராவுடன் எஸ்எச்43 (பிதுல்-சர்னி-பராசியா) மாநில நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
சர்னிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் கோராடோங்ரி ரயில் நிலையம் ஆகும். இது 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கோராடோங்ரி ரயில் நிலையம் இடர்சி -நாக்பூர் ரயில் பாதையில் அமைந்துள்ளது. தக்சின் விரைவூர்தி போன்ற வடக்கு இந்தியா மற்றும் தென்னிந்தியாவை இணைக்கும் பல நீண்ட தூர ரயில்கள் சேவையில் உள்ளன.
அருகிலுள்ள விமான நிலையங்கள் போபால் மற்றும் நாக்பூர் விமான நிலையங்கள் ஆகும்.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)