சலநாட

சலநாட கருநாடக இசையின் 36 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியிலும் 36 ஆவது இராகத்தின் பெயர் சலநாட.[1][2][3]

இலக்கணம்

[தொகு]
சலநாட சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி331 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம13 ரி3
  • ருது என்றழைக்கப்படும் 6 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 ஆவது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் பிரதி மத்திம மேளம் ரசிகப்பிரியா (72).
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் காந்தார முறையே கிரக பேதத்தின் வழியாக சுபபந்துவராளி (45) மேளகர்த்தா இராகம் கொடுக்கும்.

உருப்படிகள்

[தொகு]
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நாகாத்மஜ மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
வர்ணம் ராஜாதிராஜா பாலுஸ்வாமி தீட்ஷிதர் ஆதி

ஜன்ய இராகங்கள்

[தொகு]

சலநாட இராகத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

ஒரு சிறப்பு என்னவென்றால் நாட இராகமும், கம்பீரநாட இராகமும் சலநாடயைவிட பிரபலம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras