சாண்ட் மத் (Sant Mat) என்பது இது பொ.ஊ. 13ம் நூற்றாண்டின் போது இந்திய துணைக்கண்டத்தில் இருந்த ஒரு ஆன்மீக இயக்கம். இந்தப் பெயருக்கு "ஆன்மீக இந்து புனிதர்கள் போதனைகள்" என்று பொருள்.
இவ்வியக்கதிலுள்ள சாண்டுகளின் மூலமாகவும், அவர்களது போதனைகள் மூலமாகவும் மெய்ப்பொருளை அறிந்து கொள்வதற்காகவும் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இறையியல் தேடல்களும் போதனைகளும் வேறுபட்டிருந்தது.
உள்முகத்தேடல் மற்றும் அன்புணர்வோடு கூடிய பக்தியின் மூலம் ஒவ்வொரு ஆன்மாவும் பரமாத்மாவோடு தொடர்புக் கொள்ளும் முறைகள் போதிக்கப்பட்டது. இவ்வியக்கத்தின் சமத்துவவாத கொள்கையானது இந்து சமயம் மற்றும் முஸ்லிம் மதங்களில் உள்ள ஜாதிய அமைப்பு முறைகளிலிருந்து மாறுபட்டிருந்தது இதன் தனித்துவம் ஆகும்.[1][2][3]
துறவிகளின் வம்சாவளியினர்கள் இரண்டு முக்கிய குழுக்களாக அடையாளம் காணப்பட்டார்கள். வடக்கு மாகாணங்களான பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் போன்ற வட்டாரங்களில் இந்தியும், தெற்கு மாகாணங்களான மகாராட்டிராவில் நாமதேவர் மற்றும் இதர துறவிகள் தொன்மையான மராத்திய மொழியையும் பேசும் வழக்க மொழியாக கொண்டிருந்தனர்.[2]