சாமுவேல் ஆர்த்தர் சவுண்டர் (Samuel Arthur Saunder) (1852 – திசம்பர் 8, 1912) ஒரு பிரித்தானியக் கணிதவியலாளரும் நிலாவரைவியலாளரும் ஆவார். இவர் பெர்க்சயரில் உள்ள வெல்லிங்டன் கல்லூரியில் கல்வி பயிற்றுவித்து வந்துள்ளார். இவர் 1894 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர் ஆனார். இவர்1908 இல் பொதுமக்களுக்கு வானியலில் உரையாற்றும் கிரெழ்சாம் வானியல் பேராசிரியராக பணியமர்த்தப்பட்டார்.[1]
சவுண்டர் தான் ஒளிப்படத்தினை முதன்முதலில் பயன்படுத்தி முக்கோண அளக்கை முறையில் நிலாவின் கூறுபாடுகளை வரைந்தவர் ஆவார்.[2]இவர் 20 ஆம் நூறாண்டின் தொடக்கத்தில் நிலாப் பெயரீடுகளின் குழப்பமான நிலையைச் சுட்டிக் காட்டி, நிலாவின் கூறுபாடுகளை குறிக்கும் பெயரீடுகளைச் செந்தரப்படுத்தினார்.[3]சவுண்டர் நிலாக் குழிப்பள்ளம் 1935 இல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது 1935.[4][5]
A large ring to the west [sic] of Hipparchus, named for an English selenographer Samuel A. Saunder (1852-1912).