சாம்பரா Sambra | |
---|---|
துணைநகரம் | |
ஆள்கூறுகள்: 15°53′N 74°34′E / 15.88°N 74.56°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெல்காம் |
வட்டம் (தாலுகா) | பெல்காம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 10,755 |
Languages | |
• அலுவல்பூர்வம் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
5 | 591124 |
சாம்ப்ரா (Sambra) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் நகரில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி கர்நாடகாவின் பெல்காம் மாவட்டத்தில் பெல்காம் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1][2] பெல்காம் நகரத்திற்கு சேவை செய்யும் உள்நாட்டு விமான நிலையமான பெல்காம் விமான நிலையம் இங்கு உள்ளது.
2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சாம்பரா நகரத்தில் 6188 ஆண்கள் மற்றும் 4567 பெண்கள் என மொத்தமாக 10755 மக்கள் வசித்தனர்.[1]
பெல்காமில் உள்ள சாம்பரா நகரத்தில் இந்திய விமானப்படையின் பறத்தல் அல்லாத விமானப்படை பயிற்சி மையம் ஒன்று உள்ளது.
விமானப்படை வீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்க சாம்பரா கேந்திரிய வித்யாலயா (மத்திய பள்ளி) ஒன்றும் இங்கு உள்ளது.