சாய்சிரோ மிசுமி Saichiro Misumi | |
---|---|
பிறப்பு | சப்பான் | 16 சூன் 1916
இறப்பு | 23 பெப்ரவரி 2018 தோக்கியோ, சப்பான் | (அகவை 101)
பணி | இரண்டாம் உலகப் போர் வீரர், ஆலோசகர் |
அறியப்படுவது | இந்தியா-ஜப்பான் உறவுகள் |
விருதுகள் | பத்ம பூசண் |
சாய்சிரோ மிசுமி (Saichiro Misumi) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் உளவியலாளர் ஆவார். சப்பான் – இந்தியா நட்புறவு சங்கத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனராகவும் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.[1] 1916 ஆம் ஆண்டு சூன் மாதம் மிசுமி பிறந்தார்.[2] இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை ஆய்வு செய்த மிசுமி இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட வீர்ராவார், முன்னாள் இந்திய தேசிய இராணுவ அதிகாரி மற்றும் புகழ்பெற்ற இந்திய தேசியவாதியான சுபாசு சந்திரபோசுடன் நட்பு கொண்டிருந்தார்.[3][4][5] இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி 2014 செப்டம்பர் மாதம் 2 ஆம் நாள் சப்பானுக்கு உத்தியோகபூர்வமாகச் சென்றபோது மிசுமியைச் சந்தித்தார்.[3][4][5][6] இந்த சந்திப்பு இந்திய ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டது. இந்திய வெளியுறவு அமைச்சகம், மிசுமியின் வாழ்க்கைக் காலத்தை ஓர் ஆவணப்படத்தின் மூலம் பதிவுசெய்யும் திட்டத்தை வகுத்துள்ளது.[7] இந்திய – சப்பான் நட்புறவுக்கு மிசுமி ஆற்றிய பணிகளுக்காக இந்திய அரசு மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்மபூசண் விருதை 2015 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி சிறப்பித்தது.[8] 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று சாய்சிரோ மிசுமி காலமானார்.[9]