சாய் ஜெயலட்சுமி ஜெயராம்

சாய் ஜெயலட்சுமி ஜெயராம்
Sai Jayalakshmy Jayaram
நாடு இந்தியா
பிறப்பு16 பெப்ரவரி 1977 (1977-02-16) (அகவை 47)
சென்னை, இந்தியா
தொழில் ஆரம்பம்1996
இளைப்பாறல்2010
விளையாட்டுகள்வலது கை ஆட்டக்காரர்
பரிசுப் பணம்$56,843
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்156–135 (53.61%)
பட்டங்கள்0 மகளிர் டென்னிசு கூட்டமைப்பு, 7 பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு
அதிகூடிய தரவரிசைஎண் 331 (25 டிசம்பர் 2000)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்202–119 (62.93%)
பட்டங்கள்0 WTA, 34 ITF
அதியுயர் தரவரிசைஎண் 249 (18 ஜூன் 2001)
அணிப் போட்டிகள்
கூட்டமைப்புக் கோப்பை6–7

சாய் ஜெயலட்சுமி ஜெயராம் (Sai Jayalakshmy Jayaram) (பிறப்பு: பிப்ரவரி 16,1977) ஒரு முன்னாள் தொழில்முறை டென்னிசு வீராங்கனையாவார்.[1][2][3]

தனது தொழில் வாழ்க்கையில், பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு நடத்தும் மகளிருக்கான போட்டியில் ஏழு ஒற்றையர் மற்றும் 34 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். டிசம்பர் 25,2000 அன்று, இவர் உலக ஒற்றையர் தரவரிசையில் 331 என்ற இலக்கை அடைந்தார். ஜூன் 18,2001 அன்று, இரட்டையர் தரவரிசையில் 249 வது இடத்தைப் பிடித்தார்.

இந்தியக் கூட்டமைப்பு கோப்பை அணிகாக விளையாடிய ஜெயலட்சுமி ஜெயராம், 6-7 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தார். இவர் 2005 இல் உருசியாவின் நினா பிராட்சிகோவாசை எதிர்த்து குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார்.[4]

2003 ஐததாராபாத்தில் நடந்த இரட்டையர் போட்டியில் சக வீரர் ருஷ்மி சக்ரவர்த்தியுடன் இணைந்து மகளிர் டென்னிசு சங்கம் நடத்தும் போட்டியில் அறிமுகமானார். சாய் ஜெயலட்சுமி ஜெயராம் தொழில்முறை டென்னிசிலிருந்து 2010 இல் ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]