சிதல்துளை அல்லது சிறுவாயில் என்பது பாசிகள்[1] மற்றும் பூஞ்சையில் உள்ள முதிா்ந்த வித்திகளை வெளியேற்றும் சிறிய துளை அல்லது திறப்பாகும். இந்த பதம் உயா் தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆல், அத்தியில் உள்ள சிறப்பு மஞ்சாியில் காணப்படும் துளை இதற்கு எடுத்துக்காட்டாகும். இத்துளை வழியாகத்தான் குளவிகள் உள் நுழைந்து மலாின் மகரந்தச் சோ்க்கைக்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவுகின்றன.