சித்ரா முட்கல்

சித்ரா முட்கல் (Chitra Mudgal (பிறப்பு 10, திசம்பர் 1944) என்பவர் நவீன இந்தி இலக்கிய ஆளுமைகளில் ஒருவராவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

சித்ரா முட்கல் தமிழ்நாட்டின் சென்னையில் 1944 திசம்பர் 10 அன்று பிறந்தார்.[1] பின்னர் மும்பையில் கல்வி பயின்றார், இந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை எஸ்என்டிடி மகளிர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவர்  "சரிகா" இதழின் முன்னாள் ஆசிரியரான, அவத் நாராயண் முட்கல் என்பவரை, தன் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக மணந்தார்.[2]

இலக்கியப் பணிகள்

[தொகு]

இவர் எழுதிய புதினமான 'ஆவான்',[3]  தொழிற்சங்க இயக்கத்தைச் சேர்ந்த தத்தா சமந்த்தின் காலத்திய வாழ்க்கையையும், அக்காலகட்டத்தையும்  சித்தரிக்கும் வகையில் எழுதப்பட்டது. இந்தப் புதினம் இலக்கிய விமர்சகர்களால் தலைசிறந்த இலக்கியப் படைப்பாக அங்கீகரிக்கப்பட்டு இந்தி இலக்கியத்தில் ஒரு உன்னதமான புதினமாக நிற்கிறது.[4]

'ஆவான்' கதையானது ஒரு உறுதிமிக்க தொழிற்சங்கத் தலைவரான சங்கர் குஹா நியோகியின் கொலைக்குப் பின்னர் உருவானது.[2] இவரது கொலையைத் தொடர்ந்து மும்பையின், மற்றொரு பிரபல தொழிற்சங்கத் தலைவரான டாக்டர் தாத்தா சமந்தா படுகொலை செய்யப்பட்டார். பின்னர், மத்திய பிரதேசத்தின் மற்றொரு தொழிலாளர் தலைவரான மைஹார், கொல்லப்பட்டார். சித்ரா முட்கல் தனது தத்துவார்த்த வழிகாட்டியாக கருதிய டாக்டர் தாத்தா சமந்தாவின் கொலையானது அவரை பெரிதும் பாதித்தது. இச்சம்பவமே அவரது புதினமான 'ஆவானுக்கு' அடிப்படையாக அமைந்தது.[2]

விருதுகள்

[தொகு]
  • 2000 இல் இவரது புதினமான ஆவான் இண்டு சர்மான் இண்டர்நேசனல் கதா சம்மான் விருதைப் பெற்றது'[5]
  • 2003 இல் இவரது புதினமான ஆவான் பிர்லா பவுண்டேசனின் வைசியா சம்மான் விருதைப் பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. 2.0 2.1 2.2 http://www.tribuneindia.com/2004/20041205/edit.htm#3
  3. The novel deals with women, trade unions and the socio-political makeup of society. -The Hindu
  4. "Awards for Aavaan". Archived from the original on 2008-10-15. பார்க்கப்பட்ட நாள் 2018-03-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Chitra Mudgal's CV". Archived from the original on 2018-05-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]