சித்ரா லட்சுமணன் |
---|
பிறப்பு | சனவரி 23, 1948 (1948-01-23) (அகவை 76)[1] தமிழ்நாடு, இந்தியா |
---|
பணி | |
---|
வாழ்க்கைத் துணை | ராதிகா |
---|
சித்ரா லட்சுமணன் என்பவர் ஒர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு பல தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.[2][3]
- சித்ரா லட்சுமணன் அவர்கள் தனது ஆரம்பக் காலத்தில் ஒரு திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
- அதன் பிறகு இயக்குநர் பாரதிராஜாவின் அழைப்பை ஏற்று அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
- பின்னர் அவரது சகோதரர் சித்ரா ராமுவுடன் இணைந்து அவரது அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.
- அவ்வப்போது தனது சொந்த தயாரிப்பு திரைப்படங்களில் சில காட்சிகளில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி நடித்தும் வந்தார்.
- பின்னர் 1983 ஆம் ஆண்டில், காயத்ரி பிலிம்ஸ் என்ற சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதில் முதல் முறையாக மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தார். இப்படம் வணிக ரீதியான வெற்றிகளையும் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றது.
- மேலும் 1980 களில் தமிழ் படங்களுக்கான பத்திரிகை உறவு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
- பின்னர் ஒரு நடிகராக உத்தம வில்லன் (2015) திரைப்படத்தில் நடித்தார்.[4][5] கமல்ஹாசனுடன் சூரா சம்ஹாரம் (1988), பிரபுவுடன் பெரிய தம்பியை (1997) மற்றும் கார்த்திக்குடன் சின்ன ராஜா (1999) படங்களை இயக்கினார். ஜப்பானில் கல்யாண ராமன் (1985) திரைப்படத்தில் இவரது நகைச்சுவை வேடம் பாராட்டுக்களைப் பெற்றது. பாஸ் என்கிற பாஸ்கரன் (நேனே அப்பாயி) (2010) மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களில் இவரது நகைச்சுவை போற்றப்பட்டது.[6][7]
- மேலும் தனது வாழ்க்கை முழுவதும் லட்சுமணன் பொறுப்பான பதவிகளையும் வகித்து அதிலும் திறம்பட செயல்பட்டுவந்துள்ளார்.
- பின்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்பதன் செயலாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் 80 ஆண்டு தமிழ் சினிமா என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
தொழில்நுட்ப பாத்திரங்கள்
[தொகு]
- இயக்குநர்
- தயாரிப்பாளர்
- Chithra Lakshmanan on IMDb