சின்டர் கிளாசு சன் (Syntar Klas Sunn) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று திரோவல் குர்பா என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார்.[1]குசராத்தின் பரோடாவிலுள்ள எம். எசு. பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். அரசுப் பணியிலிருந்த இவர் கால்பந்த விளையாட்டில் ஆர்வம் கொண்டவராகவும் மேகாலயாவில் கால்பந்தாட்டத்தை பரவலாக்க ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிழக்கு காசி இல்சு மாவட்டத்தின் மாவ்ப்லாங்கு சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மேகாலயா சட்டமன்றத்திற்கு ஓர் அரசியல்வாதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்னர் ஐக்கிய சனநாயகக் கட்சியில் சேர்ந்தார்.[2][3][4]
2021 ஆம் ஆண்டு கோவிட்டு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சின்டர் கிளாசு சன் தன்னுடைய 62 ஆவது வயதில் காலமானார்.[5])