சின்மயா மிசன் என்ற அமைப்பானது சுவாமி சின்மயானந்தாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக 1953 இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிருவாகத் தலைமை அலுவலகம் இந்தியாவின் மும்பாய் (முன்னைய பம்பாய்) இல் அமைந்துள்ளது. இவ்வமைப்பிற்கு உலகேங்கிலும் 300 க்கும் மேற்பட கிளைகள் உண்டு.[2][3][4]
இந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள சின்மயாமிசன் கீழ்வரும் சேவைகளை வழங்குகின்றனர்.
- பாலவிகார் - அகவை(வயது) 5 இல் இருந்து 14 வரையுள்ள சிறுவர்கள்
- சின்மயா இயுவ கேந்திரா - 15 முதல் 28 வயதுடைய இளைஞர்கள் மற்றும் இயுவதிகளுக்கானது
- வளந்தவர்களுக்கான கல்விக்குழுக்கள்
மத மற்றும் ஆன்மீக அடிப்படையில்
[தொகு]
இந்தியாவின் சின்மயா மிசன் 24 கோவில்களையும் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் 7 க்கும் மேற்பட்ட கோவில்களையும் கொண்டுள்ளது.
- மருத்துவத்துறையில் சின்மயாமிசன் பல நலன் பேணும் நிலையங்களைக் இந்தியாவில் கொண்டுள்ளது.
- வைத்தியசாலை - 1
- தாதியர் பயிற்சிநிலையம் - 1
- சிகிச்சை நிலையங்கள் - 14
- கிராமப்புறக் கண்பராமரிப்பு நிலையங்கள் - 1
- சமூக மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகத் தத்தெடுத்த கிராமங்கள் - 120
- வயதில் மூத்தோர்களுக்கான வீடுகள் - 8
- தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் - 1
- கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்கள் -1
- சிறுவர் பராமரிப்பு நிலையம் - 1
- சின்மயாமிசனின் கல்விப் பங்களிப்பாக
- (தினப்) பாடசாலைகள் - 70
- சின்மயா பன்னாட்டு (தங்கியிருந்து) கற்கும் பாடசாலை - 1
- அரிகார் பாடசாலை (சுயதேவைகளை பூர்த்திசெய்வதற்காக தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கான இலவச பாடம் மற்றும் தொழிற்பயிற்சிகள்)
- கல்லூரிகள் (Colleges) – 4
- பட்ட படிப்புக் கல்லூரிகள் (Degree College) – 1
- மேற்கல்விக்கான சின்மயாவின் அமைப்பு எனப் பொருள்படும் சின்மயா இண்டிடியூட்டு ஆப்பு அயர் இலேனிங்கு (Chinmaya Institute of Higher Learning) -1
- சின்மயா பாரம்பரிய நிலையம்
- பாடசாலைகளில் கற்பதன் பெறுமதிகளைப் போதித்தல் (இது தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களில் நடத்தப்படுகின்றது).
- இண்டிடியூட்டு ஆப்பு மானேச்சுமண்டு
பண்பாடுகள் தொடர்பாக
[தொகு]
- புகழ் பெற்ற இந்திய வேதாகமக் கொள்கைளைப் பரப்புவதோடு பிராந்திய மொழிகளையும் பரப்புகின்றனர்.
- இளைஞர்களைப் பொதுவிடங்களில் பேசவைப்பதற்கான கருத்தரங்குகள்.
- இளைஞர்கள் மற்றும் வளந்தோருக்கான ஆளுமைகள் மற்றும் முன்னெடுப்புக்களை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறைகள்.
- கலாமந்திர் - 2
- உலக புரிந்துணர்விற்கான நிலையம் - 2
- இந்திய வேதாகம ஆய்வு நிலையம்.
சின்மாயாமிசனின் ஆதிக்கம்
[தொகு]
சின்மயா மிசன் தென்னிந்தியா மற்றும் இந்திய கலாச்சாரத்தினைப் பின்பற்றும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் பலநாடுகளில் இதன் ஆதிக்கம் காணப்படுகின்றது.
பிரபலமான பிரசுரங்கள்
[தொகு]
- சஞ்சிகைகள்
- பாலவிகார் - மாதாந்த சஞ்சிகை
- தபோவன் பிரசாத்து - மாதாந்த சஞ்சிகை
- சின்மயா உட்கோடு - மாதாந்த சஞ்சிகை
- சஞ்சிகைகள்
- பாலாட்சைன் - மாதாந்த சஞ்சிகை - இடெலாசு, அமெரிக்கா