சிபு வானூர்தி நிலையம்

சிபு வானூர்தி நிலையம்
Sibu Airport

சிபு வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: SBW
  • ஐசிஏஓ: WBGS
    Sibu Airport is located in மலேசியா
    Sibu Airport
    Sibu Airport
    சிபு வானூர்தி
    நிலையத்தின் அமைவு
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்மலேசிய அரசாங்கம்
Kerajaan Malaysia
இயக்குனர்மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்
(Malaysia Airports Berhad)
சேவை புரிவதுபிந்தாங்கோர், சரிக்கே, காப்பிட், சிபு, சரவாக், கிழக்கு மலேசியா)
அமைவிடம்சிபு; சரவாக், கிழக்கு மலேசியா
நேர வலயம்மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00)
உயரம் AMSL10 ft / 3.048 m
ஆள்கூறுகள்02°15′51″N 111°58′57″E / 2.26417°N 111.98250°E / 2.26417; 111.98250
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
13/31 2,745 9,006 தார்
புள்ளிவிவரங்கள் (2020)
பயணிகள்
போக்குவரத்து
569,625 ( 67.5%)
சரக்கு டன்கள்1,406 (Increase 11.7%)
வானூர்தி
போக்குவரத்து
7,122 ( 54.5%)

சிபு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: SBWஐசிஏஓ: WBGS); (ஆங்கிலம்: Sibu Airport; மலாய்: Lapangan Terbang Sibu) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சிபு நகருக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.[1]

இந்த வானூர்தி நிலையம், சரவாக் மாநிலத்தின் சிபு பிரிவு பகுதியில் வாழும் மக்களுக்கு உள்நாட்டுச் சேவைகளை வழங்கி வரும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

2018-ஆம் ஆண்டில், இந்த வானூர்தி நிலையத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை 1,579,528. அதே வேளையில் 20,869 விமான இயக்கங்களும் நடைபெற்று உள்ளன. சிபு நகர மையத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் தென் பகுதியில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[2]

பொது

[தொகு]

இந்த வானூர்தி நிலையம் மலேசியாவில் 11-ஆவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும்; சரவாக்கில் மூன்றாவது விறுவிறுப்பான வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது.

ஏப்ரல் 2009-இல், சிபு வானூர்தி நிலையத்தின் முனையத் தளத்தை (Terminal Building) மேம்படுத்துவதற்காக RM 150 மில்லியன் வழங்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட முனையம் 31 ஜூலை 2012-இல் அதன் செயல்பாட்டைத் தொடங்கியது.[3]

சரவாக் கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் மிரி வானூர்தி நிலையம் ஆகியவற்றுக்குப் பிறகு, சிபு வானூர்தி நிலையம் மூன்றாவது பெரிய வானூர்தி நிலையமாகும். மொத்த விமான நிலைய முனையத் தளத்தின் பரப்பளவு 15,240 சதுர.மீ. ஆகும்.[4]

வரலாறு

[தொகு]

சிபுவில் முதல் வானூர்தி நிலையம், தெக்கு (Teku) நகரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் ஒரு சாதாரண வானூர்தி நிலையமாக கட்டப்பட்டது. இருப்பினும், வானூர்தி ஓடுதளம் நேச நாட்டுப் படைகளால் கடுமையாகக் குண்டுகள் வீசப்பட்டுத் தாக்கப்பட்டது. வானூர்தி நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் 1951-இல் தொடங்கின.

தொடக்கத்தில், ஓடுபாதை 3,600 அடி நீளம்; 150 அடி அகலத்தில் கட்டப்பட்டது. முதல் வானூர்தி 1952 மே 21-ஆம் தேதி இந்த வானூர்தி நிலையத்தில் தரையிறங்கியது. 1 ஜூலை 1952 சூலை 21-ஆம் தேதி வழக்கமான சேவைகளுக்காகத் திறக்கப்பட்டது.

முதல் சேவை

[தொகு]

மலேசியா எயர்லைன்சு (Malayan Airways) நிறுவனம், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் சிங்கப்பூரிலிருந்து கூச்சிங், சிபு, லபுவான் ஆகிய இடங்களுக்கு தன் வானூர்திகளைப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தியது. 1959-இல் ஓடுபாதை 4,500 அடிக்கு 150 அடியாக நீட்டிக்கப்பட்டது.[5]

புதிய வானூர்தி நிலையத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமாக 1 ஜூன் 1994-இல் தொடங்கியது. அப்போது அந்த வானூர்தி நிலையம் சிபு நகரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தது. 31 மே 1994-இல், நான்கு மலேசியா எயர்லைன்சு வானூர்திகள் முதன் முதலாகத் தரையிறங்கின.[5]

காட்சியகம்

[தொகு]

வானூர்திச் சேவைகள்

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர்ஏசியா ஜொகூர் பாரு,[6] கோத்தா கினபாலு, கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங், சிங்கப்பூர்[7]
மலேசியா எயர்லைன்சு கோலாலம்பூர்–சிப்பாங்
மலேசியா எயர்லைன்சு
மாஸ் சுவிங்சு
பிந்துலு, மிரி, முக்கா
மை எயர்லைன் கோலாலம்பூர்–சிப்பாங் (18 சனவரி 2023)[8]

சரக்குச் சேவை

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
உலக சரக்கு விமானச் சேவை
(World Cargo Airlines)
கோலாலம்பூர்–சிப்பாங், கூச்சிங்

போக்குவரத்து புள்ளிவிவரங்கள்

[தொகு]
பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வானூர்திகளின் புள்ளிவிவரங்கள்
ஆண்டு பயணிகள்
வருகை
பயணிகள்
% மாற்றம்
சரக்கு
(டன்கள்)
சரக்கு
% மாற்றம்
வானூர்தி
நகர்வுகள்
வானூர்தி
% மாற்றம்
1995 624,738 2,455 18,905
1996 654,785 Increase 4.81 1,758 28.39 20,243 Increase 7.08
1997 631,701 3.53 1,904 Increase 8.30 19,551 3.42
1998 555,483 12.07 1,499 21.27 17,099 12.54
1999 620,830 Increase 11.76 1,745 Increase 16.41 16,096 5.87
2000 657,375 Increase 5.89 1,874 Increase 7.39 15,743 2.19
2001 725,449 Increase 10.36 2,006 Increase 7.04 16,995 Increase 7.95
2002 759,704 Increase 4.72 1,916 4.49 17,113 Increase 0.69
2003 817,687 Increase 7.63 1,701 11.22 16,885 1.33
2004 903,108 Increase 10.45 1,567 7.88 17,650 Increase 4.53
2005 920,930 Increase 1.97 1,377 12.13 17,330 1.81
2006 898,923 2.39 1,040 24.47 15,638 9.76
2007 809,955 9.90 892 14.23 12,536 19.84
2008 831,772 Increase 2.70 735 17.50 14,672 Increase 17.00
2009 939,732 Increase 12.98 856 Increase 16.46 17,449 Increase 18.93
2010 1,009,002 Increase 7.40 1,133 Increase 32.35 18,985 Increase 8.80
2011 1,133,903 Increase 12.29 1,153 Increase 1.77 18,211 4.08
2012 1,204,267 Increase 6.2 1,612 Increase 39.8 15,923 12.56
2013 1,383,887 Increase 14.9 1,413 12.3 17,196 Increase 8.0
2014 1,440,935 Increase 4.1 1,460 Increase 3.3 22,508 Increase 30.9
2015 1,454,360 Increase 0.9 1,304 10.7 21,172 Increase 5.9
2016 1,469,341 Increase 1.0 1,048 19.6 24,806 Increase 14.6
2017 1,497,412 Increase 1.9 1,285 Increase 22.6 18,598 25.0
2018 1,579,528 Increase 5.5 1,443 Increase 12.2 20,869 Increase 12.2
2019 1,750,876 Increase 10.9 1,259 12.8 16,748 19.7
2020 569,625 67.5 1,406 Increase 11.7 7,122 54.5
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[9]

புள்ளிவிவரங்கள்

[தொகு]
சிபு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு வானூர்திச் சேவை: ஏப்ரல் 2019
தர
வரிசை
இலக்குகள் பயணங்கள்
(வாரம்)
வானூர்தி
நிறுவனங்கள்
1 கோலாலம்பூர் கோலாலம்பூர்–சிப்பாங் 53 ஏர் ஏசியா, மலேசியா எயர்லைன்சு
2  சரவாக் கூச்சிங் 35 ஏர் ஏசியா
3  சரவாக் மிரி 28 மாஸ் சுவிங்சு (MASwings)
4  சரவாக் பிந்துலு 14 மாஸ் சுவிங்சு (MASwings)
4 சபா கோத்தா கினபாலு 14 ஏர் ஏசியா
6 ஜொகூர் ஜொகூர் பாரு 10 ஏர் ஏசியா
7  சரவாக் முக்கா 3 மாஸ் சுவிங்சு (MASwings)
சிபு வானூர்தி நிலையத்தின் போக்குவரத்து
தொடக்கம் அடைவு 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018
சிபு கோலாலம்பூர் 167,582 185,734 216,571 227,381 247,624 301,394 309,103 325,257 344,863 359,836 368,803
கோலாலம்பூர் சிபு 169,787 187,536 218,651 232,530 246,075 300,070 308,265 326,003 345,427 364,552 365,752
சிபு கூச்சிங் 35,136 156,361 167,033 206,421 215,094 233,064 239,622 236,735 226,719 232,813 260,446
கூச்சிங் சிபு 32,801 153,711 162,872 198,833 216,898 230,304 236,371 238,600 228,843 234,019 259,492
சிபு மிரி 31,926 32,177 32,318 4,718 51,570 53,761 58,522 50,756 50,778 45,114 46,510
மிரி சிபு 26,028 32,730 32,941 4,443 49,469 52,265 56,179 50,498 51,091 44,648 47,214
சிபு பிந்துலு 5,402 10,358 12,973 16,888 10,687 10,524 12,192 10,466 10,576 10,570 11,829
பிந்துலு சிபு 1,263 784 106 12,831 13,881 10,396 11,383 11,568 11,407 10,104 11,274
சிபு கோத்தா கினபாலு 18,340 47,365 40,133 38,319 35,227 34,961 35,808 34,993 34,832 31,986 30,497
கோத்தா கினபாலு சிபு 28,549 48,234 40,101 42,413 42,690 36,485 38,166 34,826 34,337 33,027 29,674
Source: Malaysia Airports Holdings Berhad[10]
சிபு வானூர்தி நிலையத்தின் போக்குவரத்து (பொது)
இடங்கள் 2008 2009 2010 2011 2012 2013 2014 2015 2016 2017 2018
சிபு<->கோலாலம்பூர் 337,369 373,270 435,222 459,911 493,699 601,464 617,368 651,260 690,290 724,388 734,555
சிபு<->கூச்சிங் 67,937 310,072 329,905 405,254 431,992 463,368 475,993 475,335 455,562 466,832 519,938
சிபு<->மிரி 57,954 64,907 65,259 9,161 101,039 106,026 114,701 101,254 101,869 89,762 93,724
சிபு<->பிந்துலு 6,665 11,142 13,079 29,719 24,568 20,920 23,575 22,034 21,983 20,674 23,103
சிபு<->கோத்தா கினபாலு 46,889 95,599 80,234 80,732 77,917 71,446 73,974 69,819 69,169 65,013 60,171
Source: Malaysia Airports Holdings Berhad[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".
  2. WBGS – SIBU பரணிடப்பட்டது 2014-04-14 at the வந்தவழி இயந்திரம் at Department of Civil Aviation Malaysia
  3. New Sibu airport terminal commences operation
  4. "Tender Briefing for Package Deal (Sarawak)" (PDF). MAHB. 15 March 2019. பார்க்கப்பட்ட நாள் 10 July 2019.
  5. "Sibu Airport:History". DCA Sarawak. Archived from the original on 25 February 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  6. "AirAsia adds 437 extra flights for Hari Raya | New Straits Times". 3 April 2019.
  7. Andy Chua (8 November 2022). "AirAsia to run direct flights between Singapore and Sibu from Dec 16" (in en). The Star. https://www.thestar.com.my/news/nation/2022/11/08/airasia-to-run-direct-flights-between-singapore-and-sibu-from-dec-16. 
  8. "MyAirline Promo", MyAirline, 2022, பார்க்கப்பட்ட நாள் 5 December 2022
  9. "Malaysia Airports: Airports Statistics 2018" (PDF). malaysiaairports. 2 April 2019. Archived from the original (PDF) on 11 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 14 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. 10.0 10.1 "Malaysia Airports Yearly Statistic". Archived from the original on 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]