வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 8 July 1955 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் |
முதல்வர் | முனைவர் அதிதி தே |
அமைவிடம் | 11, லார்ட் சின்ஹா சாலை , , , 700 071 22°32′35″N 88°20′58″E / 22.5431049°N 88.349436°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
சிறி சிக்சாயதான் கல்லூரி என்பது இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள ஒரு இளங்கலை மகளிர் கலைக் கல்லூரியாகும்[1]. 1955 ஆம் ஆண்டு ஜூலை 8 அன்று நிறுவப்பட்டஇக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [2].
மேற்கு வங்காளத்தின் மொழி சிறுபான்மையினரான மார்வாடிகளால் நிறுவப்பட்ட இக்கல்லூரி, சிக்சாயதான் என்ற அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது - (சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளை முன்னதாக மார்வாரி பாலிகா வித்யாலயா சங்கம் என்று அழைக்கப்பட்டது) இந்த அறக்கட்டளையானது வணிக நோக்கங்களுக்காக அல்லாமல் கல்விச்சேவைக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
முதலில் மார்வாரி சமூகத்தின் சிறுமிகளிடையே கல்வியை வழங்கவும் மேம்படுத்தவுமே பயன்பட்ட இக்கல்லூரி தற்போது சாதி, இனம், மதம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தகுதியுள்ள அனைத்து பெண் மாணவர்களுக்கும் கல்விச்சேவை புரிந்துவருகிறது.[3]
மொழிவாரி சிறுபான்மை கல்வி நிறுவனமாக, இக்கல்லூரி இந்திய அரசியலமைப்பின் பிரிவு 30 (1) இன் கீழ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ள இக்கல்லூரி, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் தரமதிப்பீடும் செய்யப்பட்டுள்ளது