சில்பா ரானடே | |
---|---|
பிறப்பு | 1966 |
தேசியம் | இந்தியர் |
பணி | இயங்குபடக்லைஞர், திரைப்பட படைப்பாளி, விளக்கபடத்தினர், வடிவமைப்பாளர், கல்வியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1995-தற்போது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 'Mani's Dying', 'Goopi Gawaiya Bagha Bajaiya' |
சில்பா ரானடே (Shilpa Ranade, பிறப்பு 1966) என்பவர் ஒரு இந்திய வடிவமைப்பாளர், இயங்குபடத்தர், திரைப்பட படைப்பாளி,[1] கல்வியாளர் ஆவார்.[2] இவர் 2001 ஆம் ஆண்டு முதல் ஐஐடி பாம்பேயில் உள்ள தொழில்துறை வடிவமைப்பு மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சேனல் 4, UK இக்காக இயங்குபட குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவரது படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு, மிகவும் மதிப்புமிக்க திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.[3] விருது பெற்ற[4] இயங்குபட திரைப்படமான கூபி கவையா பாகா பஜய்யா என்பது இவரது கடைசி முழு நீள திரைப்படமாகும். இது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவிளான பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டது.[5] நஜா கோஸ் டு ஸ்கூல் மற்றும் மணிஸ் டையிங் ஆகியவை இவரது மற்ற படங்கள் ஆகும்.[6][7][8][9][10][11]
இதன் தன் குழந்தை பருவத்தில், ஓவியம், கலை போன்றவற்றில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவருடைய பெற்றோர் இவருக்கு ஆர்வமுள்ள ஒரு துறையில் தொழிலைத் தொடர ஊக்குவித்தனர். 10 ஆம் வகுப்புக்குப் பிறகு, இவர் பயனுறு கலையைப் பயில முடிவு செய்தார். அதற்காக மும்பையில் உள்ள சர் ஜே. ஜே இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு ஆர்ட்[12] கல்வி நிறுவனத்தில் இவர் விளக்கம் மற்றும் காணொளியில் நிபுணத்துவம் பெற்றார். பின்னர் இவர் பம்பாய் ஐ. ஐ. டி. இல் காட்சித் தொடர்பியலைப் பயில முடிவு செய்தார். 1989 இல், இவர் மேம்பட்ட விளக்கப்படம் மற்றும் காணொளியில் நிபுணத்துவம் மற்றும் வடிவமைப்பில் பட்டம் (காட்சி தொடர்பு) பெற்றார்.[13] முறையாக இயங்குபடத்தைப் பயில,[12] லண்டனில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்டில் அனிமேஷனில் எம். பில் படித்தார். படிப்பின் ஒரு பகுதியாக இவர் 'சுதேசி படங்கள் மற்றும் சமூக தொடர்புடைய அனிமேஷனுக்கான கதைகள்' என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உருவாகினார்.[13]
2001 இல், இவர் பம்பாய் ஐ. ஐ. டி இல் தொழில்துறை வடிவமைப்பு மையத்தில் பணிக்கு சேர்ந்தார். மேலும் இயங்குபட மையத்தின் முதல் பட்டப்படிப்பை உருவாக்க பொறுப்பேற்றார். அதன் முதல் தொகுதி மாணவர்கள் 2006 இல் பட்டம் பெற்றனர்.[14]
ஸ்காலஸ்டிக், ஏக்லவ்யா, பிரதம் மற்றும் கரடி டேல்ஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி பதிப்பகங்களின் குழந்தைகளுக்கான வெளியீட்டிற்காக ஏராளமான புத்தகங்களையும் இவர் விளக்கப்படங்களை உருவாக்கியுள்ளார்.[15]
இவரது அண்மைய முயற்சியில் இரண்டு பெரிய தொகுதிகள் உருவாக்கபட்டன. இவை பிளாண்ட் லைப் மற்றும் சைல்டு பார்மர்ஸ்' ஆகியவை ஆகும். 'பிளாண்ட் லைப்' என்பது குட்டையான மற்றும் உயரமான தாவரங்கள் குறித்த குழந்தைகளின் உணர்வுகளை வரைந்து எழுதும் ஒரு தொகுப்பு ஆகும். ' சைல்டு பார்மர்ஸ் ' என்பது தற்கொலை செய்து கொண்ட விதர்பா விவசாயிகளின் குழந்தைகளின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.[3]
2013 ஆம் ஆண்டில், இவர் தனது முதல் முழு நீள இயங்குபடத் திரைப்படமான கூப்பி கவையா பாகா பஜையா படத்தை சில்ட்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியாவுக்காக இயக்கினார்.[3] இந்த படம் 1915 ஆம் ஆண்டு உபேந்திரகிஷோர் ராய் சௌத்ரி எழுதிய சிறுவர் கதையின் தழுவலாகும். இவரது இந்தப் படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பூசன் கொரியா, மாமி இந்தியா, டிஐஎஃப்எஃப் துபாய், என்ஒய்சிஎஃப்எஃப் நியூயார்க் போன்ற பட விழாக்களில் திரையிடப்பட்டது.[3]
இவர் குழந்தைகளுடன் நெருக்கமாகப் பணிபுரியத்தக்க புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைத் தயாரித்து குழந்தைகளுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கும் டாம்ரூவின் நிறுவன உறுப்பினராகவும் உள்ளார். ஸ்காலஸ்டிக், ஏக்லவ்யா, பிரதம், கரடி கதைகள் போன்ற நாட்டின் முன்னணி வெளியீட்டாளர்கள் குழந்தைகளுக்கு வெளியிடும் ஏராளமான புத்தகங்களுக்கு அவர் விளக்கப்படங்களை உருவாக்கியள்ளார்.[3]