சிவசக்தி ஆனந்தன் | |
---|---|
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2020 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 சூலை 1964 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
அண்ணாமலை நடேசு சிவசக்தி ஆனந்தன் (பிறப்பு: 29 சூலை 1964)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
சிவசக்தி ஆனந்தன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினராவார். இவர் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 2004,[3] 2010,[4] 2015 தேர்தல்களிலும் இவர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5][6][7]
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2001 நாடாளுமன்றம்[2] | வன்னி மாவட்டம் | ததேகூ | 14,023 | தேர்வு |
2004 நாடாளுமன்றம்[3] | வன்னி மாவட்டம் | ததேகூ | 29,801 | தேர்வு |
2010 நாடாளுமன்றம்[4] | வன்னி மாவட்டம் | ததேகூ | 11,674 | தேர்வு |
2015 நாடாளுமன்றம்[8] | வன்னி மாவட்டம் | ததேகூ | 25,027 | தேர்வு |