சிவசங்கரி சுப்பிரமணியம் Sivasangari Subramaniam | ||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசம் | மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||||
வசிப்பிடம் | அலோர் செட்டார், கெடா | |||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | சனவரி 24, 1999 சுங்கை பட்டாணி, மலேசியா | |||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 160செமீ (5 அடி 3 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||
எடை | 53கிகி | |||||||||||||||||||||||||||||||||||||
பயிற்சியாளர் | யெசி எங்கெல்பிரெக்ட் | |||||||||||||||||||||||||||||||||||||
பயன்படுத்தப்படும் மட்டை | டன்லோப் | |||||||||||||||||||||||||||||||||||||
பெண்கள் ஒற்றையர் | ||||||||||||||||||||||||||||||||||||||
அதி கூடிய தரவரிசை | இல. 13 (ஏப்பிரல் 2024) | |||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய தரவரிசை | இல. 13 (1 ஏப்பிரல் 2024) | |||||||||||||||||||||||||||||||||||||
தலைப்பு(கள்) | 14 | |||||||||||||||||||||||||||||||||||||
இறுதிச் சுற்று(கள்) | 18 | |||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||
தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 3 ஏப்பிரல் 2024. |
சிவசங்கரி சுப்பிரமணியம் (பிறப்பு: 24 சனவரி 1999) மலேசிய சுவர்ப்பந்து வீராங்கனை ஆவார்.[1] இவர் 2018 மே மாதம், உலகத் தரவரிசையில் 38-ஆவது நிலையையும், 2022-ஆம் ஆண்டில் உலகத் தரவரிசையில் 26-ஆவது நிலையையும், 2024 ஏப்ரலில் 13-ஆவது நிலையையும் பெற்றார். இதுவே இதுவரை இவர் பெற்ற சிறப்பு தரவரிசையாகும்.
அத்துடன் ஐவி லீக் (Ivy League) பெண்கள் பிரிவில் 2022 ஆண்டின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.[2] 2018-ஆம் ஆண்டு இவர் சடோமி வாடனபே-வை தோற்கடித்து பிரித்தானிய இளையோர் திறந்த சுற்று வாகையாளர் பட்டதை வென்றார்.
இவர் 2011-ஆம் ஆண்டில் மலேசிய விளையாட்டு மன்றத்தின் சிறந்த வளர்ந்துவரும் விளையாட்டாளர் விருதைப் பெற்றார்.[3]
2018 சூலை 8-இல் நடைபெற்ற 34வது ஓஹன தேசியநிலை சுவர்ப்பந்துப் போட்டியில் லோ வீ வெர்ன் என்பவரை வெற்றி கொண்டு வெற்றியாளர் பட்டத்தைப் பெற்றார். இதன் முலம், சிவசங்கரி மலேசியாவின் மகளிர் சுவர்ப்பந்து போட்டியில், ஆக இளைய விளையாட்டாளராகத் திகழ்கிறார்.[4][5]
2024 ஏப்ரல் 1 இல், இலண்டனில் நடைபெற்ற பி.எஸ்.ஏ உலகச்சுற்று கிளாசிக் இறுதிப் போட்டியில் உலகத் தர வரிசையில் 2-ஆம் நிலையில் உள்ள கனியா எல் அமாமி என்num எகிப்தியரைத் தோற்கடித்து தங்கத்தை வென்றார்.[6]
சிவசங்கரியின் குறிப்பிடத்தக்க சாதனையை அங்கீகரித்து, இவருக்கு "தி வேர்ல்ட் கேம்ஸ்" என்ற அமைப்பு ஏப்ரல் 2024 இற்கான 'மாதத்தின் தடகள வீரர்' என்ற மதிப்புமிக்க பட்டத்தை வழங்கியது.[7][8]
சிவசங்கரி மலேசியா, கெடா மாநிலம், சுங்கை பட்டாணியில் சுப்பிரமணியம் கன்னியப்பன், வள்ளி நாகப்பன் ஆகியோருக்கு 1999 சனவரி 24 அன்று பிறந்தார். தனது எட்டாவது அகவையில் சுவர்ப்பந்து விளையாட்டில் ஈடுபடலானார். துவாங்கு ஜாஃபர் கல்லூரியில் கல்வி பயின்றார். தற்போது இங்கிலாந்து, கோர்னெல் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு/ ஊடக ஆய்வுகள் படிப்பில் உயர்கல்வி கற்று வருகிறார்.[9]
2022 சூன் 26 அன்று, சிவசங்கரி மாஜு விரைவுச்சாலையில் வாகன விபத்தில் சிக்கினார். முகம், சி1 முதுகெலும்பில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.[10] இவ்விபத்தின் காரணமாக, இவர் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக வேண்டியிருந்தது.[11]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)