சிவ்குமார் பட்டால்வி (ஆங்கிலம்: Shiv Kumar Batalvi) (பிறப்பு: 1936 சூலை 23 – இறப்பு: 1973 மே 6 [1] ) இவர் ஒரு இந்திய கவிஞரும், எழுத்தாளரும் மற்றும் பஞ்சாபி மொழியின் நாடக ஆசிரியருமாவார். இவர் தனது காதல் கவிதைகளுக்காக மிகவும் பிரபலமானவர், அதன் உயர்ந்த ஆர்வம், பாத்தோஸ், பிரிப்பு மற்றும் காதலரின் வேதனை உணர்வு போன்றவற்றால் குறிப்பிடத்தக்கவர். [2]
புராணன் பகத் என்பவரின் புராணக்கதையான இலூனா என்பதை (1965), [3] அடிப்படையாகக் கொண்ட இவரது காவிய வசன நாடகத்திற்காக, 1967 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி (இந்தியாவின் தேசிய கடிதங்கள் அகாதமி) வழங்கிய சாகித்ய அகாடமி விருதை இளம் வய்திலேயே பெற்றுள்ளார். இது நவீன பஞ்சாபி இலக்கியத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாகவும், [4] இது நவீன பஞ்சாபி கிஸ்ஸாவின் புதிய வகையையும் உருவாக்கியது. [5] இன்று, இவரது கவிதைகள் அவற்றுள் நவீன பஞ்சாபி இலக்கியவாதிகளான மோகன் சிங் (கவிஞர்) மற்றும் அமிர்தா ப்ரிதம் போன்றவர்களுக்கு சமமான நிலையில் நிற்கின்றன. [6] இவர்கள் அனைவரும் இந்தோ-பாகிஸ்தான் எல்லையின் இருபுறமும் பிரபலமாக இருப்பவர்கள் ஆவர். [7]
சிவ்குமார் பட்டால்வி 1936 சூலை 23 அன்று (அவரை தொடர்பான ஒரு சில ஆவணங்கள் 1937 அக்டோபர் 8 என்று கூறுகிறது) .(இப்போது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில்) சியால்கோட் மாவட்டத்திலுள்ள, சகர்கர் வட்டத்தில், பரா பிண்த் லோக்தியன் என்ற கிராமத்தில், வருவாய் துறையில் வட்டாட்சியராகப் பணிபுரியும் பண்டிதர் கிரிசன் கோபால் மற்றும் சாந்தி தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். [ மேற்கோள் தேவை ] 1947 ஆம் ஆண்டில், அவருக்கு 11 வயதாக இருந்தபோது, இவரது குடும்பம் இந்தியா பிரிப்புக்குப் பின்னர் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பட்டாலாவுக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவரது தந்தை கிராமக் கணக்காளாராக பணி புரிந்து வந்தார். அங்கு இளம் சிவ் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். [8] இவர் எப்போதும் ஒரு கனவுலகிலேயே இருந்து வந்தார். பெரும்பாலும் பகல் பொழுதுகளில் மறைந்தே வாழ்ந்துள்ளார். கிராமத்திற்கு வெளியே உள்ள கோவிலுக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் மரங்களுக்கு அடியில் கிடந்ததாகக் தெறிகிறது. கிராமத்தில் சொல்லப்படும் இந்து காவியமான இராமாயணத்தின் கதைகளைச் சொல்லி அலைந்து திரியும் சிறு பாடகர்கள், பாம்பாட்டிகள் போன்றவர்களாலும் அவர் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. இது அவரது கவிதைகளில் உருவகங்களாக இடம்பெறுகிறது. இது ஒரு தனித்துவமான கிராமப்புற சுவையையும் அளிக்கிறது. [ மேற்கோள் தேவை ]
1953 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது பத்தாம் வகுப்பினை முடித்தார். பின்னர், பட்டாலாவிலுள்ள பேரிங் ஒன்றிய கிருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னரே காதின் என்ற இடத்திலுள்ள எஸ்.என். கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு இவர் தனது ஆளுமைக்கு மிகவும் பொருத்தமான கலைப் பிரிவில் சேர்ந்தார். இருப்பினும் அவர் அதையும் இரண்டே ஆண்டுகளில் விட்டுவிட்டார். அதன்பிறகு கட்டிடப் பிறியியல் படிக்க இமாச்சலப் பிரதேசத்தின் பைஜ்நாத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்தார். இங்கேயும் மீண்டும் அதை நடுவிலேயே விட்டுவிட்டார். [9] அடுத்து, நபா, அரசு இரிபுதாமன் கல்லூரயில் இவர் சிறிது காலம் படித்தார்.
பிற்கால வாழ்க்கையில், இவரது தந்தைக்கு காதின் என்ற ஊரில் கிராமக்கணக்காராகர் வேலை கிடைத்தது. இந்த காலகட்டத்தில்தான், இவர் தனது சிறந்த படைப்புகளில் சிலவற்றை படைத்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 1960 இல் பிரன்தா பராகா (தி ஸ்கார்ஃப் ஆஃப் சோரோஸ்) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இது ஒரு உடனடி வெற்றியாக மாறியது. 1965 ஆம் ஆண்ட் வாக்கில் பத்லவிசியின் சில மூத்த எழுத்தாளர்கள், ஜஸ்வந்த் சிங் ரகி, கர்த்தார் சிங் பால்கன் மற்றும் பர்கத் ராம் யும்மான் உள்ளிட்டவர்கள் இவரைத் தங்களின் சிறகுகளின் கீழ் கொண்டு சென்றனர். 1967 ஆம் ஆண்டில் இலூனா (1965) என்ற வசன நாடகத்தில் இவரது மகத்தான பணிக்காக சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற இளையவராக ஆனார். [10] அவரது கவிதை பாராயணங்கள், மற்றும் அவரது சொந்த வசனத்தைப் பாடுவது, அவரையும் அவரது படைப்பையும் மக்களிடையே இன்னும் பிரபலமாக்கியது.
அவரது திருமணத்திற்குப் பிறகு, 1968 இல், அவர் சண்டிகருக்கு மாறினார். அங்கு அவர் பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு பொது மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியில் சேர்ந்தார். அடுத்த சில ஆண்டுகளில், உடல்நலம் அவரை மோசமாக பாதித்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து எழுதினார். [ மேற்கோள் தேவை ]
1967 பிப்ரவரி 5, அன்று, குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கிர்ரி மங்கல் நகரைச் சேர்ந்த அருணா, [11] என்ற தனது சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு பிராமணப் பெண்ணை மணந்தார். பின்னர் தம்பதியருக்கு மெகர்பன் (1968) மற்றும் பூஜா (1969) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
1972 ஆம் ஆண்டில் சிவ்குமார் பட்டால்வி தனது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, அவர் கல்லீரல் வீக்கத்தால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நலப் பிரச்சினைகள் குடும்பத்தை நிதி நெருக்கடியில் ஆழ்த்தின. இத்தகைய சூழ்நிலை தொடர்ந்து இருந்து வந்த நிலையில் இவரது மனைவி அருணா பட்டால்வி சிவ்குமாரை தனது தாய் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார். [12]
இவரது புராணக்கதைகளில் ஒன்றான அல்விதா (பிரியாவிடை) அமிர்தசரஸில் உள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தால் 1974 ஆம் ஆண்டில் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது. இவரது நினைவாக சிறந்த எழுத்தாளருக்கான 'சிவ்குமார் பட்டால்வி விருது' ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. [13] [14]