சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தினி சவுக், பழைய தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′21″N 77°13′57″E / 28.6558°N 77.2325°E |
சமயம் | சீக்கியம் |
மாநிலம் | தில்லி |
சிஸ் கஞ்ச் சாகிப் குருத்துவார் (Gurdwara Sis Ganj Sahib) இந்தியாவின் பழைய தில்லியில் செங்கோட்டைக்கு எதிரே உள்ள சாந்தினி சவுக் பகுதியில் அமைந்த சீக்கிய குருத்துவார் ஆகும்.[1][2][3] 1675-இல் முகலாய மன்னர் அவுரங்கசீப், கட்டாய இசுலாமிய மதம் மாற்ற உத்தரவை எதிர்த்ததால், கொலை செய்யப்பட்ட குரு தேக் பகதூர் நினைவாக 1783-இல் இந்த சாந்தினி சவுக் பகுதியில் குருத்துவார் நிறுவப்பட்டது. பின்னர் 1930 இதனை சீரமைத்து தற்போதைய வடிவத்தில் உள்ளது.