சி. சிவமோகன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் வன்னி மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2015 | |
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2013–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தொழில் | மருத்துவர் |
சிவப்பிரகாசம் சிவமோகன் (Sivapragasam Sivamohan) இலங்கைத் தமிழ் மருத்துவரும், அரசியல்வாதியும், நடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
சிவமோகன் 2013 மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு 1வது வட மாகாண சபைக்கு தெரிவானார்.[1][2] இவர் தனது பதவிப் பிரமாணத்தை வவுனியாவில் சட்டத்தரணி கே. தயாபரன் முன்னிலையில் 2013 அக்டோபர் 16 இல் எடுத்துக் கொண்டார்.[3][4] இவர் வட மாகாண அரசில் சுகாதார மற்றும் நாட்டு மருத்துகள் அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.[5]
சிவமோகன் வன்னி மாவட்டத்தில் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிட்டு 18,412 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்கு முதன் முறையாகத் தெரிவானார்.[6][7]
சிவமோகன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார் [8]