CsN3 இல் அசைடின் ஒருங்கிணைப்பு கோளம்
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் அசைடு
caesium azide | |
வேறு பெயர்கள்
சீசியம் அசைடு
| |
இனங்காட்டிகள் | |
22750-57-8 | |
ChemSpider | 81071 |
EC number | 245-196-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6101636 |
| |
பண்புகள் | |
CsN3 | |
வாய்ப்பாட்டு எடை | 174.926 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற ஊசிகள் |
அடர்த்தி | 3.5 கி/செ.மீ3 |
உருகுநிலை | 310 °C (590 °F; 583 K) |
224.2 கி/100 மி.லி (0 °செல்சியசு) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
புறவெளித் தொகுதி | I4/mcm, No. 140 |
Lattice constant | a = 6.5412 Å, c = 8.0908 Å |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் அசைடு (Caesium azide) CsN3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.சீசியமும் அசைடும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
KN3, RbN3, மற்றும் TlN3 சேர்மங்களின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பையே சீசியம் அசைடும் ஏற்கிறது. நாற்கோண உருக்குலைந்த சீசியம் குளோரைடு கட்டமைப்பில் ஒவ்வோர் அசைடு அயனியும் எட்டு உலோக நேர்மின் அயனிகளுடன் ஒருங்கிணைந்து படிகமாகிறது. ஒவ்வோர் உலோக நேர்மின் அயனியும் எட்டு விளிம்புநிலை நைட்ரசன் மையங்களுடன் ஒருங்கிணைகின்றன. 151 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படும்பொது இக்கட்டமைப்பு கனசதுர கட்டமைப்புக்கு மாற்றமடைகிறது.[1]
ஐதரசோயிசிக் அமிலத்தையும் சீசியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தி சீசியம் அசைடை தயாரிக்கலாம்.:[2]
சீசியம் கார்பனேட்டையும் ஒரு காரமாகப் பயன்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம்
சிசியம் அசைடை வெற்றிடத்தில் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தி மீத்தூய சீசியம் உலோகத்தை தயாரிக்கலாம்.:[3]