சுங்கை காடுட் | |
---|---|
Sungai Gadut | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°40′N 102°00′E / 2.667°N 102.000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | சிரம்பான் |
சுங்கை காடுட் (ஆங்கிலம்: Sungai Gadut; மலாய் மொழி: Sungai Gadut) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சுங்கை காடுட் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. அனைத்துலக அளவில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் செனவாங் தொழிற்சாலைப் பகுதி, மாநிலத்தின் இரண்டாவது மிக முக்கியமான தொழில்துறைப் பகுதியாக விளங்குகிறது.
இந்த நகரப் பகுதி மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை (North–South Expressway Southern Route); செனவாங் சந்திப்பு (Senawang Junction); கூட்டரசு சாலை 1 (மலேசியா) ; மற்றும் சுங்கை காடுட் சாலை N5 வழியாக இணைக்கப்பட்டு உள்ளது.
சுங்கை காடுட் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 565 மாணவர்கள் பயில்கிறார்கள். 44 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1][2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|
NBD4081 | சிரம்பான் தோட்டம் | SJK(T) Ladang Seremban | சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | சுங்கை காடுட் | 565 | 44 |