சுதெப்பி பாம் | |
---|---|
பிறப்பு | சிகாகோ, இல்லினாயிசு |
துறை | வானியல் |
கல்வி கற்ற இடங்கள் | ஆர்வார்டு பல்கலைக்கழகம் (கலையிளவல்) / மேரிலாந்து பல்கலைக்கழகம் (முனைவர்) |
சுதெப்பி பாம் (Stefi Baum) (பிறப்பு: சிகாகோ, இல்லினாயிசு) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து 1993 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[1][2] வர் அபுள் தொலைநோக்கியை உருவாக்க உதவினார். இவர்2004 இல் இருந்து உரோச்சர் தொழில்நுட்ப நிறுவனத்தின் செசுட்டர் எப். கார்ல்சன் படிம அறிவியல் மையத்தின் இயக்குநராக இருந்தார்.[3]
இவர் ஆர்வார்டு பல்க்லைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் கலையிளவல் பட்டத்தையும் மேரிலாந்து பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தையும் பெற்ரார். தற்போது அறிவியல் பீடத்தின் தலைவராகவும் மனிடோபா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியராகவும் உள்ளார். [4]