சுபத்ரா தேவி (Subhadra Devi) இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மிதிலியா கலைஞர் மற்றும் மதுபானி ஓவியத்திற்காக அறியப்பட்டவர். இவர் மிதிலா கலா விகாஸ் சமிதியின் புரவலர் ஆவார். 2023ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[1][2]
சுபத்ரா தேவி 1941ஆம் ஆண்டு பீகாரில் உள்ள மதுபானியில் பிறந்தார். மதுபானி மாவட்டத்தில் உள்ள சேலம்பூர் கிராமத்தில் வசிப்பவர், தனது குழந்தைப் பருவத்தில் சுபத்ரா தேவி, மற்றவர்களைப் பார்த்து பேப்பியர்-மச்சே கலையைக் கற்றுக்கொண்டார்.[3]
சுபத்ரா தேவி 1970 முதல் இப்போது வரை கலை வேலைகளில் தீவிரமாக இருந்தார்.[4] இவரது கலைப் படைப்பு "ஒரு வாழைத் தோப்பில் கிருஷ்ணரும் ராதையும்" பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[5]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)