சுபா வாரியர் | |
---|---|
திருமதி சுபா வாரியர் | |
தேசியம் | இந்தியா |
கல்வி | திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி |
பணி | விண்வெளி பொறியாளர் |
பணியகம் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
அறியப்படுவது | 104 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும்போது நிகழ்படமாக்கியது |
வாழ்க்கைத் துணை | இரகு |
பிள்ளைகள் | இருவர் |
சுபா வாரியர் (Subha Varier) ஒரு இந்திய விண்வெளி பொறியாளர். இந்திய செயற்கைக்கோள் ஏவுதல்களில் பயன்படுத்தப்படும் நிகழ்பட அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர். ஒரே ஒரு ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை பதிவு செய்த பின்னர் 2017ஆம் ஆண்டில் பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருதினைப் பெற்றார்.
கேரளாவின் ஆலப்புழாவில் வளர்ந்த இவர், [1] திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றார். [2]
1991இல் இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். இவர் விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தின் ஏவியோனிக்ஸ் பிரிவில் பணி புரிந்தார். [2]
பி.எஸ்.எல்.வி சி 37 விண்வெளித் திட்டமானது [3] பிப்ரவரி 15, 2017 அன்று 104 செயற்கைக்கோள்களை சூரிய-வட்டச் சுற்றுப்பாதையில் வைக்கும் நோக்கம் கொண்டது. [4] இந்த செயற்கைக்கோள்கள் ஆறு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவை. மேலும் ஒவ்வொரு செயற்கைக்கோளும் இன்னொன்றைத் தொடாமல் ஏவப்பட்டது மட்டுமல்லாமல், அவ்வாறு நடைபெற்றதற்கான நிகழ்படங்கள் நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக இவருக்கு இப்பணி வழங்கப்பட்டது.[2] செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றிகரமாக இருந்தது. இப்பணி எட்டு வெவ்வேறு நிகழ்பட கருவிகளால் பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக நிகபடம் பின்னர் செயலாக்கப்பட்டு, சுருக்கப்பட்டு மீண்டும் பூமிக்கு அனுப்பப்பட்டது . செயற்கைக்கோள்கள் வெளியிடப்பட்டதால் நிகழ்படம் டிகோட் செய்யப்பட்டு நிகழ்நேரத்தில் இயக்கப்பட்டது. பின்னர் நிகழ்படம் பார்க்கப்பட்டது. பின்னர் கோப்புகள் ஒரு விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தின் வலை களஞ்சியத்திற்கு அனுப்பப்பட்டன. [2]
மார்ச் 2017இல், இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து விருதைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்ட அனட்டா சோனி, பி. கோதைநாயகி உட்பட மூன்று விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். [3] 2017ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, இவருக்கு புது தில்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாரி சக்தி விருது வழங்கினார். [5] விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் சான்றிதழுடன் 100,000 ரூபாய் சன்மானமும் கிடைத்தது. [2]
வாரியருக்கும் இவரது கணவர் இரகுவுக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவரும் விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தில் பணிபுரிகிறார். இவர்கள் கௌடியருக்கு அருகிலுள்ள அம்பலமுக்கில் வசிக்கிறார்கள். [1]