சுரின்சார் ஏரி | |
---|---|
அமைவிடம் | ஜம்மு காஷ்மீர் |
ஆள்கூறுகள் | 32°41′46″N 75°08′49″E / 32.696076°N 75.146806°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
Islands | நடுவில் சிறிய தீவு |
Invalid designation | |
அலுவல் பெயர் | சுரின்சார், மான்சார் ஏரிகள் |
தெரியப்பட்டது | 8 November 2005 |
உசாவு எண் | 1573[1] |
சுரின்சார் ஏரி (Surinsar Lake)[2] ஜம்மு நகரத்திலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளால் சூழ அமைந்துள்ளது. இது புராண முக்கியத்துவமுடைய ஏரியாக உள்ளது. சுரின்சார் மற்றும் மான்சார் ஏரிகள், இரட்டை ஏரிகள் எனக் கருதப்படுகின்றன. மான்சார் ஏரி சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுரின்சார் மன்சார் வனவிலங்கு சரணாலயம் இந்த இரண்டு ஏரிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.[3]
இப்பகுதியில் ஏராளமான விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் பறவைகள் உள்ளன. ஏரியின் நடுவில் சிறிய தீவு ஒன்று உள்ளது.[4] இந்தத் தீவில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் உள்ளன.[3] சில மத நம்பிக்கைகள் காரணமாக, இந்த ஏரியில் நீச்சல் மற்றும் படகு சவாரி செய்யப்படுவதில்லை.
இந்து புராணங்களின்படி, இந்த ஏரியின் தோற்றம் மகாபாரதத்தின் போர்வீரரான அர்ஜுனுடன் தொடர்புடையது. அர்ஜுன் மன்சாரின் தரையில் புகழ்பெற்ற அம்பு ஒன்றினை விட்டதாகவும், அம்புபட்ட நிலத்திலிருந்து நீரூற்று வெளியேறி சுரின்சார் ஏரியாக மாறியதாகவும் நம்பப்படுகிறது.[3] முன்பு, இது சூரங் சார் [a], என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் சுரின்சார் என மாறியது.[4]