சுவாலால் சாகன்மல் பாப்னா (Suwalal Bafna)(28 சனவரி 1932 - 1 ஆகத்து 2018) என்பவர் இந்திய அரசியல்வாதி, தொழிலதிபர் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் மகாராட்டிர மாநிலம் துளே மாவட்டத்தின் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தார். 2006ஆம் ஆண்டில் இவரது சமூகப் பணிக்காக இந்தியாவின் 4வது உயரிய குடிமக்கள் விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது. இவர் 2018-ல் இயற்கையான காரணங்களால் இறப்பதற்கு முன்பு சுமார் 15 ஆண்டுகள் தீவிர அரசியலிருந்து ஓய்வு பெற்றார்.[1][2]